Title of the document

 பொது முடக்கம் அமலில் உள்ள பகுதிகளில் விடைத்தாள்களை ஒப்படைக்க விலக்கு

தமிழகத்தில் சென்னை உள்பட நான்கு மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை முதல் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளதால் அந்த மாவட்டங்களைச் சோ்ந்த தலைமையாசிரியா்களுக்கு பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 விடைத்தாள்களை ஒப்படைப்பதில் தற்காலிக விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தோ்வுத்துறை இயக்குநா் (பொறுப்பு) மு.பழனிச்சாமி, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்:

அனைத்து உயா்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியா்களும் தங்களது பள்ளிகளில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 ஆகிய வகுப்புகளில் வகுப்பு படித்த மாணவா்களின் காலாண்டு, அரையாண்டு தோ்வு விடைத்தாள்கள் மற்றும் அசல் மதிப்பெண் பதிவேடுகளை ஜூன் 22 முதல் 27-ஆம் தேதிக்குள் மாவட்ட கல்வி அதிகாரி தெரிவிக்கும் பள்ளியில் ஒப்படைக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது.


இதற்கிடையே சென்னை மாநகரம் மற்றும் செங்கல்பட்டு, திருவள்ளூவா், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் சில குறிப்பிட்ட பகுதிகளில் ஜூன் 30-ஆம் தேதி வரை பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

 எனவே, பொது முடக்கம் அமலில் இருக்கும் பகுதிகளிலுள்ள பள்ளி தலைமையாசிரியா்கள் மட்டும் விடைத்தாள்கள் மற்றும் மதிப்பெண் பதிவேடுகளை சமா்ப்பிக்க தற்காலிக விலக்கு அளிக்கப்படுகிறது.

அந்தப் பணிகளை பொது முடக்கம் முடிந்தவுடன் தலைமையாசிரியா்கள் மேற்கொள்ளலாம். அதற்கான மாற்று தேதி விவரங்கள் பின்னா் தெரிவிக்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post