மாதிரி தேர்வுகளில் எடுத்த மதிப் பெண்களின் அடிப்படையில் தேர்ச்சி

Join Our KalviNews Telegram Group - Click Here
ஐதராபாத்தில் 10-ம் வகுப்பு தேர்வு கள் நடத்துவதா வேண்டாமா என்பது குறித்து கல்வித் துறை அமைச்சர் சபிதா இந்திரா ரெட்டி, அரசு முதன்மை செய லாளர் சோமேஷ்குமார், கல்வித் துறை சிறப்பு செயலாளர் சித்ரா ராமச்சந்திரன், முதல்வர் அலுவலக முதன்மை செய லாளர் எஸ்.நர்சிங் ராவ் ஆகியோ ருடன் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் நேற்று ஆலோசனை நடத்தினார்.

இதில் கரோனா தொற்று வேக மாக பரவுவதால் 10-ம் வகுப்பு தேர்வு நடத்தாமல் மாணவர்கள் அனைவரையும் தேர்ச்சி பெறச் செய்து இன்டர்மீடியட் உயர்க் கல்விக்கு அனுப்ப முடிவு செய்யப் பட்டது. மாணவர்கள் 10-ம் வகுப் பில் காலாண்டு அரையாண்டு மற்றும் தேர்வுக்கு முந்தைய மாதிரி தேர்வுகளில் எடுத்த மதிப் பெண்களின் அடிப்படையில் தேர்ச்சி பெற செய்வது என முடிவு செய்யப்பட்டது.

தெலங்கானா மாநிலத்தில் 5 லட்சத்து 34 ஆயிரத்து 903 மாணவ, மாணவிகள் 10-ம் வகுப்பு தேர்வு எழுத இருந்தனர். மொத்தம் 6 பாடத்தில், 11 தாள்களுக்கு தேர்வு நடைபெற இருந்தது. அவற்றில் 2 பாடங்களுக்கான 3 தாள்களுக்கு தேர்வு நடத்தப்பட்டது. அந்த நேரத்தில் மாநில உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்படி தேர்வுகளை அரசு ஒத்தி வைத்தது.

இந்நிலையில் ஒத்திவைக்கப் பட்ட தேர்வுகளை ரத்து செய்து இதற்கு முன்பு பள்ளிகளில் நடத் தப்பட்ட உள் மதிப்பீட்டுத் தேர்வில் பெறப்பட்ட மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்களை உயர் வகுப்புக்கு அனுப்ப முதல் வர் சந்திரசேகர ராவ் உத்தரவு பிறப்பித்தார்.
இந்த பயனுள்ள தகவலை அனைத்து வாட்ஸ்அப் குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்..

கருத்துரையிடுக

0 கருத்துகள்