Title of the document


வங்கிக் கணக்கை வீட்டிலிருந்தபடியே தொடங்குவது எப்படி? 
SBI வங்கியில் ஆன்லைனிலேயே டிஜிட்டல் சேமிப்புக் கணக்கை தொடங்குவதற்கான வசதியை மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளது.வெறும் ஆதார் எண், பான் கார்டு எண் மட்டும் வைத்து உடனடியாக வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் சேமிப்புக் கணக்கு துவங்க இந்த வசதி உதவுகிறது. 
கொரோனா அச்சுறுத்தலால் மக்கள் வீட்டிலேயே அடைந்துகிடக்கின்றனர். ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்தாலும் மக்கள் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்வதே பாதுகாப்புக்கு உகந்தது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
இந்நிலையில், புதிதாக வங்கிக் கணக்கு பெற விரும்பும் மக்கள் வீட்டிலிருந்தபடியே சேமிப்புக் கணக்கு திறக்கும் வகையில் ஏற்கெனவே சில வங்கிகள் டிஜிட்டல் முறையில் வங்கிக் கணக்கு திறப்பதற்கான வசதிகளை அறிமுகப்படுத்தியுள்ளன. 
இந்நிலையில், எஸ்பிஐ வங்கியின் யோனோ ஆப் மூலம் உடனடியாக டிஜிட்டல் சேமிப்புக் கணக்கு திறப்பதற்கான வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து எஸ்பிஐ தலைவர் ராஜ்னிஷ் குமார், “வங்கிக் கிளைக்கு செல்லாமலேயே வங்கி சேவைகளை முழுமையாக பயன்படுத்துவதற்கு டிஜிட்டல் சேமிப்புக் கணக்குகள் உதவுகின்றன. இதில் வங்கி சேவைகளுக்கான எல்லா அம்சங்களும் இருக்கின்றன” என்று தெரிவித்தார்.இதன்படி டிஜிட்டல் சேமிப்புக் கணக்கு தொடங்கியபின்னர் வாடிக்கையாளருக்கு ரூபே ஏடிஎம்/டெபிட் கார்டு அனுப்பிவைக்கப்படும். 
❇️இந்த டிஜிட்டல் சேமிப்புக் கணக்கை திறப்பது எப்படி?❇️
🔥உங்கள்மொபைலில் யோனோ ( Yono) ஆப்பை டவுன்லோட் செய்து பான் கார்டு எண், ஆதார் கார்டு எண் உள்ளிட்ட விவரங்களை வழங்க வேண்டும். 
🔥உங்கள் மொபைலுக்கு வரும் ஓடிபி (OTP) பாஸ்வோர்டை நிரப்பி மற்ற கூடுதல் விவரங்களையும் நிரப்ப வேண்டும். 
🔥இதை நிறைவுசெய்த பிறகு வாடிக்கையாளருக்கான வங்கிக் கணக்கு உடனடியாக செயல்பாட்டுக்கு வரும்.
🔥இந்த கணக்கை பயன்படுத்தி உடனடியாக பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம். 
🔥கூடுதலாக டெபிட் கார்டு கிடைத்தபிறகு கார்டு பரிவர்த்தனைகளும் மேற்கொள்ளலாம்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post