Title of the document

  கடலியல் எனப்படும் ஓஷனோகிராபி துறை

 வேதியியல், இயற்பியல், ஜியோபிசிக்ஸ், ஜியாலஜி, கணிதம், இன்ஜினியரிங் போன்ற துறைகளின் திறன்களைக் கொண்டிருப்பது கடலியல் எனப்படும் ஓஷனோகிராபி. பொதுத் துறை மற்றும் தனியார் துறைகளில் சிறப்பான வேலை வாய்ப்புகளைத் தரக்கூடியது இத் துறை.

இந்தியாவில் சில பல்கலைக்கழகங்களும் கல்வி நிறுவனங்களும் இத் துறையில் பட்ட மேற்படிப்புகளைத் தருகின்றன. மரைன் பயாலஜி என்ற பெயரிலோ ஓஷனோகிராபி என்ற பெயரிலோ இப்படிப்புகள் வழங்கப்படுகின்றன.

பி.எஸ்சியில் உயிரியல், தாவரவியல், வேதியியல், மீன் வளஇயல், பூமியியல், இயற்பியல், விவசாயம், மைக்ரோபயாலஜி, அப்ளைட் சயன்ஸ் ஆகியவற்றில் ஒன்றைப் படித்திருப்பவர் இந்த படிப்புகளுக்கு விண்ணப் பிக்கலாம். இதில் எம்.பில்., மற்றும் பி.எச்டி., படிப்புகளையும் படிக்கலாம். அதற்கு நெட் அல்லது கேட் தகுதி தேவைப்படுகிறது.

பட்ட மேற்படிப்புகளை முடிப்பவருக்கு கோல் இந்தியா, ஜியாலஜிகல் சர்வே ஆப் இந்தியா, சென்ட்ரல் கிரவுண்ட் வாட்டர் போர்ட் ஆகியவற்றிலும் ஓ.என்.ஜி.சி., இந்துஸ்தான் ஸிங்க் போன்ற நிறுவனங்களிலும் பணி வாய்ப்புகள் கிடைக்கின்றன. ராணுவத்திலும் வாய்ப்புகள் கிடைக்கின்றன. .
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post