பத்து வயதுக்குள் 41 உலக சாதனைகள்: வியக்க வைக்கும் யோகா பிரிஷா
இன்று உலக யோகா தினம். இந்நாளில் நெல்லை பிரிஷாவை பாராட்டாமல் இருக்க முடியாது. சாதிப்பதற்கு நேரம், காலம் வயதெல்லாம் ஒரு தடையே இல்லை என்பதற்கு சிறந்த உதாரணம் இவர்தான். காரணம் பத்து வயதிற்குள் பம்பரமாக சுழன்று யோகா நீச்சலில் 41 உலக சாதனைகளை நிகழ்த்தியுள்ளார் இச்சிறுமி
இவரது
தாய் தேவிபிரியா யோகா ஆசிரியை. மகளுக்கு ஒரு வயதில் இருந்தே யோகா
கற்பித்தார். சொல் பேச்சு கேளாமல் ஓடியாடும் வயதில் தாயின் கட்டளைக்கு
கட்டுப்பட்டு யோகா கற்றார் பிரிஷா. ஐந்து வயது முடிவதற்குள் தேசிய, சர்வதேச
அளவில் யோகா, ஆசன முறை நீச்சல் போட்டிகளில் 100க்கும் மேற்பட்ட
தங்கப்பதக்கங்களை குன்றென குவித்து, மற்றவர்களை மலைக்க வைத்தார்.
சவாலான
கண்ட பேருண்டாசனம், ராஜகப் போட்டாசனம், லிங்காசனம், வாமதேவ ஆசனம், ஏகபாத
வாமதேவ, குட்த மற்றும் சுப்த பத்மாசனங்களை ஒரே நிமிடத்தில் பல முறை செய்து
உலக சாதனை படைத்துள்ளார். 2018, 2019 ல் மலேசியா, தாய்லாந்து நாடுகளில்
நடந்த போட்டியில் நீருக்குள் அதிக ஆசனங்கள் செய்தும், நீச்சல் போட்டியிலும்
வென்று இதுவரை 41 உலக சாதனைகளை சொந்தமாக்கிவிட்டார். இவரை பாராட்டி யோக
ராணி, யோக கலா, யோக ஸ்ரீ, யோக சாதனா, சாதனை செல்வி, யோகா லிட்டில் ஸ்டார்
உள்ளிட்ட விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
2019ல்
புதுடில்லி மருத்துவக்கல்லுாரி ஒன்று கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது.
உலகிலேயே அதிக உலக சாதனை நிகழ்த்தி &'கவுரவ டாக்டர்&' பட்டம்
பெற்ற முதல் சிறுமியும் இவர் தான். அரசு போட்டித் தேர்வுகளில் பிரிஷா
பற்றிய வினாக்களும் இடம் பெற்றுள்ளன. முதியவர்கள், பார்வையற்றோர்,
போலீசாருக்கும் யோகா கற்று கொடுக்கிறார். இவரிடம் யோகா கற்ற மாணவர்
கணேஷ்குமார், பார்வையற்றோருக்கான யோகாவில் முந்தைய உலக சாதனையை
முறியடித்துள்ளார்.
பிரிஷா கூறியது:
எல்லோருக்கும் யோகா எண்ணற்ற பலன்களை தருகிறது. உடலை சுறுசுறுப்பாக
வைத்திருப்பதுடன் ஆரோக்கிய வாழ்க்கைக்கு வழிவகுக்கும். ஞாபக சக்தி
பெருகும். நேர்மறை எண்ணங்கள், தன்னம்பிக்கை, பொறுப்புணர்ச்சி வரும். என்
சாதனைக்கு சொந்தக்காரர் எனது அம்மாதான். நான், அம்மா, பாட்டி ரவிசந்திரிகா
இணைந்து நீருக்குள் மூழ்கி ஆசனம் செய்வதே அடுத்த சாதனையாக இருக்கும்.
தினமும் 10 நிமிடம் யோகா செய்தால் உடலும் மனமும் குழந்தை போல் மகிழ்ச்சியாக
இருக்கும். அதற்கு சர்வதேச யோகா தினத்தில் உறுதி எடுங்கள், என்றார்.
Post a Comment