வருடம் ரூ.22 லட்சம் ஊதியம்! பொதுத் துறை நிறுவனத்தில் வேலை வாய்ப்பு!

Join Our KalviNews Telegram Group - Click Here

வருடம் ரூ.22 லட்சம் ஊதியம்! பொதுத் துறை நிறுவனத்தில் வேலை வாய்ப்பு! 


பொதுத் துறை நிறுவனங்களில் ஒன்றான பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள இணைப் பொது மேலாளர் காலிப் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பி.இ, பி.டெக் துறையில் தேர்ச்சி பெற்று குறைந்தது 4 வருடம் பணி அனுபவம் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஜூன் 20ம் தேதிக்குள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL)
மொத்த காலிப் பணியிடம் : 01
பணி : இணை பொது மேலாளர்
கல்வித் தகுதி : பி.இ, பி.டெக் துறையில் மின்சாரவியல், தகவல் தொழில்நுட்பம், எலட்ரானிக்கல் அண்டு எலக்ட்ரானிக்ஸ் பொறியியல் உள்ளிட்ட துறையில் ஏதேனும் ஓர் துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு : விண்ணப்பதாரர் 50 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : மாதம் ரூ.80,000 முதல் ரூ.2,20,000 வரையில், வருடத்திற்கு ரூ.22 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
தேர்வு முறை : நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.bel-india.in/ என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து ஜூன் 20ம் தேதிக்குள் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : Manager (HR/MR,MS&ADSN), Bharat Electronics Ltd., Jalahalli PO, Bangalore 560013
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.bel-india.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.

இந்த பயனுள்ள தகவலை அனைத்து வாட்ஸ்அப் குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்..

கருத்துரையிடுக

0 கருத்துகள்