Title of the document

11-ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு தடை !! பள்ளிக் கல்வித்துறை அதிரடி உத்தரவு 

தமிழகத்தில் தற்போது 10ம் வகுப்பில் அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் 11-ம் வகுப்பு மாணவர் சேர்க்கை நடத்துவதற்கு பெரும்பாலான பள்ளிகள் ஆர்வம் காட்டி வருகின்றன.

மாணவர் பெற்றோரிடம் இது தொடர்பாக பள்ளி நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக பள்ளிக்கல்வித்துறைக்கு பல்வேறு புகார் வந்துள்ளது. 10-ம் வகுப்புக்கு இன்னும் ரிசல்ட் வெளியிடப்படாத நிலையில் மாணவர் சேர்க்கை நடத்தக்கூடாது என்று தற்போது பள்ளிக்கல்வித்துறை ஒரு தடை உத்தரவை பிறப்பித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

11-ம் வகுப்பில் ஏற்கனவே அமலில் இருந்து வரக்கூடிய 600 மதிப்பெண் பாடத்தொகுப்புக்கு பதிலாக இந்த ஆண்டு முதல் 500 மதிப்பெண்கள் கொண்ட புதிய பாடத்தொகுப்பானது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த புதிய பாடத்தொகுப்பின் கீழ் மாணவர் சேர்க்கையை முன் அனுமதி பெறாமல் நடத்தக்கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அவ்வாறு அனுமதி பெறாமல் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டும் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கையும் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post