10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அனைவரும் தேர்ச்சி ..தெலுங்கானா முதல்வர் அறிவிப்பு.!!
இந்தியா முழுவதும் கொரோனா வைரவின் தாக்கமானது தொடர்ந்து அதிகரித்து வந்தது. இதனால் நாடுதழுவிய ஊரடங்கு அமலாகி, பல தேர்வுகள் இரத்து செய்தும், தள்ளிவைத்தும் அறிவிக்கப்பட்டது.இந்நிலையில், தெலுங்கானா மாநிலத்தில் 10 ஆம் வகுப்பு பயின்று வந்த மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் 10 ஆம் வகுப்பு தேர்வு எழுதாமலேயே அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவானது எடுக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவரின் இன்டர்னல் மதிப்பெண் அடிப்படையில், மாணவர்களுக்கு கிரேடு வழங்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
கொரோனா தொற்று காரணமாக பத்தாம் வகுப்பு தேர்வுகளை நடத்த இயலவில்லை என்று தெலுங்கானா மாநில அரசு விளக்கம் அளித்துள்ளது.
Post a Comment