Title of the document

 10 ம் வகுப்பு தேர்வு ரத்து !! மாணவர்களுக்கு எந்த வித பாதிப்பும் இருக்காது !! ஏன் தெரியுமா ?


தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பால் , 10ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து , மதிப்பெண் கணக்கீடு, பிளஸ் 1ல், 'குரூப்'புகள் தேர்வு, டிப்ளமா உள்ளிட்ட, பிற வகை படிப்புகளை படிக்க முடியுமா என, மாணவர்களுக்கும், பெற்றோருக்கும், பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன.
இதுகுறித்து, கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி கூறியதாவது ;

இத்தேர்ச்சி வாயிலாக, பிளஸ் 1ல் குரூப்புகள் தேர்வு மற்றும் டிப்ளமா படிக்க, எந்த தடையும் இருக்காது. காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில், 80 சதவீதம் , அவர்களின் வருகை பதிவின் அடிப்படையில், 20 சதவீத மதிப்பெண் வழங்கப்படும்.

கடந்தாண்டுகள் போன்றே , இந்தாண்டும் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படும். இதனால், உயர் படிப்பு மற்றும் வேலை வாய்ப்பில் பாதிப்பு இருக்காது. மருத்துவர்கள் மற்றும் நிபுணர்கள் ஆலோசனை அடிப்படையில் தான், தேர்வு ரத்து முடிவை அரசு எடுத்துள்ளது.
கல்வியாளர் நெடுஞ்செழியன் கூறியதாவது ;

பத்தாம் வகுப்பு பாடத்திட்டத்தில் இருந்து, பிளஸ் 1, பிளஸ் 2 பாடத்திட்டங்கள் முற்றிலும் மாறுபட்டவை. பிளஸ் 1ல் மாணவர்கள் தங்களை நல்ல முறையில் தயார்படுத்திக்கொள்ள வாய்ப்பு கிடைத்துள்ளது. கொரோனா பாதிப்பு காலத்தில், கல்வித்துறையில் ஒரு மாற்றம் தேவைப்படுகிறது என கூறியுள்ளார்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post