
தமிழகத்தின்
தலைநகரான சென்னையை பொருத்தவரையில் மாலை நேரத்தில் வானம் பொதுவாக
மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை
பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது. இதனைப்போன்று நகரின் அதிகபட்ச
வெப்பநிலையாக 40 டிகிரி செல்சியசும், குறைந்தபட்ச வெப்ப நிலையாக 29 டிகிரி
செல்சியசும் பதிவாகலாம் என்றும் கூறியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரையில்
கோயம்புத்தூர் மாவட்டத்தின் சின்னக்கல்லாரில் 7 செண்டி மீட்டர் மழையும்,
வால்பாறையில் 6 சென்டி மீட்டர் மழையும், விழுப்புரம் மாவட்டம்
திண்டிவனத்தில் 5 சென்டி மீட்டர் மழையும், கோயம்புத்தூர் மாவட்டம்
சின்கோனாவில் 5 சென்டி மீட்டர் மழையும், சோலையாறில் 4 சென்டி மீட்டர்
மழையும், தேனி மாவட்டத்தின் பெரியாரில் 3 சென்டி மீட்டர் மழையும்,
புதுக்கோட்டை மாவட்டத்தின் குடுமியான்மலையில் 3 சென்டி மீட்டர் மழையும்,
தஞ்சாவூர் மாவட்டத்தின் வல்லம் பகுதியில் ஒரு சென்டிமீட்டர் மழை
பெய்துள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், மீனவர்களுக்கான எச்சரிக்கையாக கர்நாடகா, கோவா மற்றும் மகாராஷ்டிரா கடலோரப் பகுதிகள், குஜராத் கடற்கரைப் பகுதிகளில் பேரலைகள் எழும்பும் என்றும், சூறாவளி காற்று 40 கிலோ மீட்டர் வேகம் முதல் 50 கிலோ மீட்டர் வேகம் வரை வீசக்கூடும் என்றும், அலைகள் 4 மீட்டர் வரை உயரலாம் என்பதால், மீனவர்கள் மேற்கொண்ட பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Post a Comment