Title of the document

Hack செய்ய வாய்ப்புள்ளதால் TikTok, UC browser, ShareIT உட்பட 52 சீன Apps-ஐ பயன்படுத்த வேண்டாம்: இந்திய புலனாய்வு அமைப்பு 




  Hack செய்ய வாய்ப்புள்ளதால் டிக்டோக் (TikTok), யுசி பிரவுசர் (UC browser) மற்றும் ஷேர்இட் (ShareIT) போன்ற பிரபலமான 52 சீன பயன்பாடுகளை, இந்திய மக்கள் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என இந்திய உளவுத்துறை (Indian Intelligence) மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்துஸ்தான் டைம்ஸின் ஒரு அறிக்கையின்படி, சீனாவுடன் இணைக்கப்பட்ட 52 மொபைல் பயன்பாடுகளைப் பயன்படுத்துவதைத் தடுக்க மக்களிடம் அறிவுறுத்துமாறு இந்திய பாதுகாப்பு ஏஜென்சிகள் மத்திய அரசாங்கத்திடம் (Government of India) கேட்டுக் கொண்டுள்ளன. இவை பாதுகாப்பானவை அல்ல, இந்தியாவுக்கு (India) வெளியே ஒரு பெரிய அளவிலான தரவைப் பிரித்தெடுப்பதில் இவை வேலை செய்கின்றன எனவும் கூறியுள்ளது.
வீடியோ கான்பரன்சிங் பயன்பாடான ஜூம், (Zoom), குறுகிய வீடியோ பயன்பாடு டிக்டாக் (TikTok) மற்றும் யுசி பிரவுசர் ( UC browser), ஸேண்டெர் (Xender),ஷேர்இட் (ShareIT) மற்றும் கிளீன் மாஸ்டர் (Clean-Master) போன்ற பிற பயன்பாடு மற்றும் உள்ளடக்க பயன்பாடுகள் இதில் அடங்கும். இந்த பயன்பாடுகளுடன் இணைக்கப்பட்டுள்ள அச்சுறுத்தல் ஒவ்வொன்றாக மதிப்பிடப்பட வேண்டும் என்று ஏஜென்சிகள் நம்புகின்றன.

பயன்பாடுகளின் முழு பட்டியல்
TikTok
Vault-Hide
Vigo Video
Bigo Live
Weibo
WeChat
SHAREit
UC News
UC Browser
BeautyPlus
Xender
ClubFactory
Helo
LIKE
Kwai
ROMWE
SHEIN
NewsDog
Photo Wonder
APUS Browser
VivaVideo- QU Video
Perfect Corp
CM Browser
Virus Cleaner (Hi Security Lab)
Mi Community
DU recorder
YouCam Makeup
Mi Store
360 Security
DU Battery Saver
DU Browser
DU Cleaner
DU Privacy
Clean Master - Cheetah
CacheClear DU apps studio
Baidu Translate
Baidu Map
Wonder Camera
ES File Explorer
QQ International
QQ Launcher
QQ Security Centre
QQ Player
QQ Music
QQ Mail
QQ NewsFeed
WeSync
SelfieCity
Clash of Kings
Mail Master,
Mi Video call - Xiaomi
Parallel Space

இவற்றில், பாதுகாப்பு காரணங்களுக்காக ஜூம் பயன்பாடு குறித்து ஏற்கனவே பல செய்திகளில் வந்துள்ளது. இந்திய சைபர் செக்யூரிட்டி ஏஜென்சி - கம்ப்யூட்டர் எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் டீம் ஆஃப் இந்தியாவின் (சிஇஆர்டி-இன் - CERT-in) பரிந்துரையின் பேரில் ஜூம் பயன்படுத்துவது குறித்து அரசாங்கம் ஒரு ஆலோசனையை வெளியிட்டது. உள்துறை அமைச்சக ஆலோசனைக்கு நிறுவனம் பதிலளித்திருந்தது, இது பயனர் பாதுகாப்பு குறித்து தீவிரமாக இருப்பதாக வலியுறுத்தியது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post