Title of the document

சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து 

 ஜூலை 1-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை நடைபெற இருந்த சி.பி.எஸ்.இ.

10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து சுப்ரீம் கோர்ட்டில் மத்திய                                https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjC1Sh4CyUr2XuHfQi3v2G_LnqQATrln4ObElfvY9Kaxvcxh1HdXMycX-IWl6R15kt7wTB6fX91P67yegTmspuP2iZvIgXezN4bGVFrn7nFSaZMnmMV-4FVFURhayyGuwaZdDfZkASIEpc/s1600/cbsee.JPG

சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு ஜூலை 1-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை நடைபெற இருந்த மீதம் உள்ள பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது. சி.பி.எஸ்.இ. தேர்வுகள் சி.பி.எஸ்.இ. (மத்திய இடைநிலை கல்வி வாரியம்) 12-ம் வகுப்புக்கு கடந்த பிப்ரவரி 15-ந் தேதி தொடங்கிய பொதுத்தேர்வு ஏப்ரல் 3-ந் தேதியுடன் முடிவடைவதாக இருந்தது.

இதேபோல் சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்புக்கு பிப்ரவரி 21-ந் தேதி தொடங்கிய பொதுத்தேர்வு மார்ச் 29-ந் தேதி முடிவடைவதாக இருந்தது. இதற்கிடையே கொரோனா பரவல் காரணமாக மார்ச் 25-ந் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், மேற்கண்ட இரண்டு வகுப்புகளுக்கும் சில பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெறவில்லை. சுப்ரீம் கோர்ட்டில் மனு சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12 வகுப்புகளுக்கு மீதம் உள்ள பாடங்களுக்கான பொதுத்தேர்வுகள் வருகிற ஜூலை 1-ந் தேதியில் முதல் 15-ந் தேதி வரை நடைபெறும் என்று சி.பி.எஸ்.இ. சமீபத்தில் அறிவித்தது. இந்த தேர்வை ரத்து செய்யக் கோரி மாணவர்கள் சிலரின் பெற்றோர்கள் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுக்களில் கூறப்பட்டு இருந்ததாவது:- கொரோனா அதிகரிக்கும் நாட்டில் கொரோனா நோய்த் தொற்று ஜூலை மாதத்தில் மேலும் அதிகரிக்கும் என்று எய்ம்ஸ் ஆஸ்பத்திரி மருத்துவர்கள் தெரிவித்துள்ள நிலையில் அந்த மாதம் 1-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான சி.பி.எஸ்.இ. தேர்வுகள் நடைபெறும் என்று மத்திய இடைநிலை கல்வி வாரியம் என்று அறிவிப்பாணை வெளியிட்டு உள்ளது.

இது அந்த வாரியம் பாரபட்சமாகவும், தன்னிச்சையாகவும், மாணவர்களின் நலனில் அக்கறை இன்றியும் செயல்படுவதை காட்டுகிறது. நாடு முழுவதும் மொத்தம் 3 ஆயிரம் தேர்வு மையங்களில் நடைபெறவிருந்த இந்த தேர்வுகள் தற்போது 15 ஆயிரம் மையங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் நோய்த்தொற்று சிறு கிராமங்களிலும் பரவ வாய்ப்பு உள்ளது. அறிவிப்பாணை வெளிநாடுகளில் உள்ள மையங்களில் நடைபெறுவதாக இருந்த தேர்வுகளை தேர்வு வாரியம் ரத்து செய்து இருக்கிறது.

ஆனால் இந்தியாவில் உள்ள மாணவர்களின் நலனில் அக் கறை கொள்ளாமல் நோய்த்தொற்று அதிகரித்து வரும் நிலை யிலும் நாடு முழுவதும் தேர்வுகள் நடத்துவதற்கு அறிவிப்பாணை வெளியிட்டு உள்ளது. எனவே மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு ஜூலை மாதத்தில் நடத்துவதாக அறிவித்துள்ளசி.பி.எஸ்.இ. தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும். ஏற்கனவே நடத்தப்பட்ட தேர்வுகளின் அடிப்படையிலும், எஞ்சியுள்ள பாடங்களுக்கான மதிப்பெண்கள் மற்றும் அகநிலை மதிப்பீட்டின்படி அளிக் கப்பட்டுள்ள மதிப்பெண்களின் சராசரி அடிப்படையிலும் மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்க வேண்டும்.

 இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது. மீண்டும் விசாரணை இந்த மனு மீதான விசாரணை கடந்த 23-ந் தேதி நடந்த போது, ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் குறித்த முடிவை கோர்ட்டுக்கு தெரிவிப்பதாக சி.பி.எஸ்.இ. கூறி இருந்தது. இதைத்தொடர்ந்து தள்ளிவைக்கப்பட்ட இந்த வழக்கு நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், தினேஷ் மகேஸ்வரி, சஞ்சீவ் கன்னா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு காணொலி காட்சி மூலம் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. தேர்வுகள் ரத்து விசாரணை தொடங்கியதும் மத்திய அரசு மற்றும் சி.பி.எஸ்.இ. தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதாடுகையில், தற்போது பல மாநிலங்களில் கொரோனா நோய்த்தொற்று பரவல் அதிகரிப்பதன் காரணமாக வருகிற ஜூலை 1-ல் இருந்து 15-ந் தேதிவரை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட 10 மற்றும் 12-வது வகுப்புகளுக்கான தேர்வுகளை ரத்து செய்ய சி.பி.எஸ்.இ. முடிவு செய்து இருப்பதாக கூறி இருப்பதாக கூறினார்.

 12-ம் வகுப்பை பொறுத்தமட்டில் மீதம் உள்ள பாடங்களுக்கு பின்னர் தேர்வு நடத்தப்படும் என்றும், விரும்பும் மாணவர்கள் அதில் பங்கேற்கலாம் என்றும், அந்த தேர்வுகளில் அவர்கள் பெறும் மதிப்பெண்கள் இறுதியானதாக கணக்கிடப்படும் என்றும், அந்த தேர்வுகளில் பங்கேற்காத மாணவர்களுக்கு ஏற்கனவே நடத்தப்பட்ட 3 தேர்வுகளின் அடிப்படையில் மதிப்பெண்கள் கணக்கிட்டு வழங்கப்படும் என்றும் கூறினார்.

 10-ம் வகுப்பு 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன என்றும், அதுபற்றி அறிக்கை தாக் கல் செய்து இருப்பதாகவும் துஷார் மேத்தா கூறினார். ஜூலை மாத மத்தியில் தேர்வு முடிவு வெளியாகலாம் என்றும் அவர் தெரிவித்தார். மராட்டியம், தமிழ்நாடு, டெல்லியில் தேர்வு நடத்த முடியாத சூழ்நிலை இருப்பது பற்றியும் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது. நீதிபதிகள் கேள்வி இதைத்தொடர்ந்து நீதிபதிகள், சூழ்நிலை சாதகமாக அமையும் போது 12-ம் வகுப்புக்கு மீதம் உள்ள பாடங்களுக்கு தேர்வுகள் நடத்தப்படும் என்று கூறுகிறீர் கள். ஆனால் ஒவ்வொரு மாநிலத்திலும் நிலைமை ஒவ்வொரு மாதிரியாக இருக்கிறது. எனவே அதுபற்றி மத்திய அரசு முடிவு எடுக்குமா? அல்லது மாநிலங்கள் தீர்மானிக்குமா? என்று கேள்வி எழுப்பினார்கள் அதற்கு துஷார் மேத்தா அதுபற்றிய அறிவிக்கை இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிடப்படும் என்று தெரிவித்தார். பின்னர் நீதிபதிகள், ஏற்கனவே நடத்தப்பட்ட தேர்வுகளின் அடிப்படையில் மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்குவது மற்றும் பின்னர் தேர்வுகள் நடத்துவது, தேர்வு முடிவுகளை வெளியிடுவது குறித்த தங்கள் இறுதியான நிலைப்பாட்டை மத்திய அரசு கோர்ட்டுக்கு தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

 ஐ.சி.எஸ்.இ. தேர்வுகள் இதைத்தொடர்ந்து, ஐ.சி.எஸ்.இ. (இந்திய பள்ளி தேர்வு சான்றிதழ் கவுன்சில்) 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு மீதம் உள்ள பாடங்களுக்கான பொதுத்தேர்வு களை ரத்து செய்வதாக அந்த கவுன்சிலின் சார்பில் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது. அதை நீதிபதிகள் ஏற்றுக் கொண்டனர். பின்னர் நீதிபதிகள், இன்று (வெள்ளிக்கிழமை) காலை இந்த வழக்கின் மீதான உத்தரவை பிறப்பிப்பதாக கூறி விசாரணையை ஒத்திவைத்தனர்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post