Title of the document
வயிறு உப்புசத்தால் அவஸ்தையா? இதோ அருமருந்து

வயிறு உப்புசத்தால் அவஸ்தைப்படுபவர்களுக்கு இந்த கசாயம் அருமருந்தாக விளங்கும், பயன்படுத்திப் பலன்பெறுங்கள்.

தேவையான பொருட்கள்

 நுணா இலை - ஒரு கைப்பிடி



 ஓமம் - 5 கிராம்

 மிளகு - 2 கிராம்

 மஞ்சள் தூள் - இரண்டு சிட்டிகை

  செய்முறை

முதலில் ஓமம் மற்றும் மிளகை உடைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் நுணா இலையைப் போட்டு வதக்கிக் கொள்ளவும். பின்பு அதில் உடைத்து வைத்துள்ள மிளகு , ஓமம் ஆகியவற்றைப் போட்டு அதில் 400 மி.லி அளவு தண்ணீர் ஊற்றி மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும். நன்றாக கொதிக்க வைத்து 150 மி.லி அளவாக சுண்ட வைத்து கசாயமாக்கி வடிகட்டிக் கொள்ளவும். பயன்கள் இந்தக் கசாயம் வயிற்று உப்புசத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் அருந்தாகும்.

இந்தக் கசாயத்தை தயார் செய்து காலை, மதியம் மற்றும் மாலை என மூன்று வேளையும் தலா 50 மி.லி அளவு குடித்துவந்தால் வயிறு உப்புசம் நீங்கும்.

இரவு படுக்கப் போகும் முன்

 வெற்றிலை (2),

மிளகு(2) ,



உலர் திராட்சை (5)

இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப்போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

  குறிப்பு அனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேகவைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post