Title of the document
சென்னை மாநகராட்சி சார்பில் 10 - ம் வகுப்பு செல்லும் மாணவர்களுக்கு ஆன்லைன் வாயிலாக வகுப்புகள் எடுக்க ஆன்ட்ராய்ட் போன்கள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது . தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் தற்போது 9 ம் வகுப்பு முடித்து , 10 ம் வகுப்பிற்கு செல்ல உள்ள சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்கள் 5,000 பேருக்கு , ' ரெட்மி நோட் 5 ' என்ற ஆன்டிராய்டு மொபைல் வழங்கப்பட்டுள்ளது . அதேபோல் , 11 ம் வகுப்பு முடித்து , 12 ம் வகுப்பிற்கு செல்லும் மாணவர்களுக்கும் , அடுத்த வாரம் ஆன்டிராய்டு மொபைல்கள் வழங்கப்பட உள்ளது . மாணவர்களை ஆசிரியர்கள் போனில் அழைத்து , ஆன்ட்ராய்டு மொபைல்கள் வழங்கியதை எதிர்பாராத , மாணவ மாணவிகள் மகிழ்ச்சியில் திழைத்துள்ளனர் . தமிழகத்தில் பள்ளிகள் திறக்கின்ற வரை , மாணவர்களுக்கு , ' ஜூம் செயலி ' வழியாக கணிதம் , அறிவியல் , சமூக அறிவியல் ஆகிய பாடங்களை நடத்த இருப்பதாகவும் , இதனை கருத்தில் கொண்டு மாணவர்களுக்கு பயனளிக்கும் வகையில் மாநகராட்சி நிர்வாகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.ஏற்கனவே மாணவர்கள் வீடுகளில் அதிக நேரம் செல்போன்கள் பயன்படுத்தி வருகின்றனர் . இந்த சூழ்நிலையில் மாணவர்களுக்கு செல்போன் வழங்கியிருப்பது மாணவர்களை படிப்பில் இருந்து கவனத்தை திசை திருப்பும் என்று ஆசிரியர்கள் தரப்பில் கருத்து முன்வைக்கப்படுகின்றது . # இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

1 Comments

Post a Comment

Previous Post Next Post