பத்து ஆண்டுகளுக்கு வீட்டிலிருந்தே பணியாற்ற உள்ள பேஸ்புக் ஊழியர்கள்!

Join Our KalviNews Telegram Group - Click Here
9080019831 - Add This Number In Your Whatsapp Groups - 9080019831 அமெரிக்காவின் பிரபல சமூகவலைதளமான பேஸ்புக்கின் 50 சதவீத ஊழியர்கள் அடுத்த 5 முதல் பத்து ஆண்டுகளுக்கு வீட்டிலிருந்தே பணியாற்றுவார்கள் என அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர் பெர்க் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் கொரோனா பரவியதையடுத்து பல்வேறு ஆன்லைன் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை பாதுகாப்பு காரணமாக வீட்டிலிருந்தே பணியாற்ற அறிவுறுத்தியது. அதன்படி உலகின் மிகப் பெரிய சமூக வலைதளமான பேஸ்புக் நிறுவனத்தின் ஊழியர்கள் கடந்த 2 மாதங்களாக அலுவலகத்திற்கு வராமல் வீட்டிலிருந்தே ஆன்லைன் மூலம் பணிபுரிகின்றனர். இந்நிலையில் கொரோனா பரவல் உலகம் முழுவதும் பெரும்பாலான நாடுகளில் இன்னும் முழுமையாக கட்டுக்குள் வராமல் இருப்பதால் அமெரிக்காவின் பேஸ்புக் நிறுவனத்தின் பாதி ஊழியர்களை அடுத்த 5 முதல் 10 ஆண்டுகளுக்கு வரை வீட்டிலிருந்தே பணியாற்ற அந்நிறுவன சிஇஓ மார்க் ஜுக்கர் பெர்க் தெரிவித்துள்ளார். இதன்படி 48,000க்கும் அதிகமான அந்நிறுவன ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்ற உள்ளனர்.

Post a comment

0 Comments