Title of the document
2019-09-04-14-16-30

சிவகங்கை மாவட்டம் அல்லிநகரம் அரசு மேல்நிலைப் பள்ளிபட்டதாரி ஆசிரியர் டி.ஜெயமங்கலம் உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு :


High Court Stay Order - Download here...


நான் 30.4.2020 - ல் ஓய்வுபெற வேண்டும் . எனக்கு 31.5.2020வரை பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது . இந்நிலையில் அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 58 - ல் இருந்து 59 வரை உயர்த்தி தமிழக அரசு 7.5.2020 - ல் அரசாணை பிறப்பித்தது . இதனால் 31.5.2020 - ல் ஓய்வுபெறும் ஆசிரியர்கள் , அரசு ஊழியர்கள் பயன் பெறுவர் . என்னைப்போல் ஏப்ரல் 30 - ல் ஓய்வுபெற்று பணி நீட்டிப்புப் பெற்றவர்களுக்குப் பலனில்லை.

இந்த அரசாணை ஆசிரியர்கள் மத்தியில் பாரபட்சம் காட்டுவதாக உள்ளது . எனவே 31.5.2020 - ல் ஓய்வு  பெறும்ஆசிரியர்கள் , அரசு ஊழியர்களுக்கு மட்டும் ஓய்வு பெறும்வயதை 59 ஆக உயர்த்தும் அரசாணையை ரத்து செய்து 30.4.2020 - ல் ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வு வயது நீட்டிப்புச் சலுகை வழங்க உத்தர விடவேண்டும் . அதுவரை என்னை மே 31 - ல் பணியில் இருந்து விடுவிக்கத் தடை விதிக்க வேண்டும் . இவ்வாறு மனுவில் கூறப்பட்டி ருந்தது .

இதேபோல் விருதுநகர் மாவட்டம் வன்னியம்பட்டி உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் ஜவஹர் , விருதுநகர் முத்துராமலிங்கபுரம் சிவசங்கர் , செம்பட்டி பார்வதி , திருப்பத்தூர் கோபாலகிருஷ்ணன் ஆகியோரும் மனு தாக்கல் செய்திருந்தனர் .இந்த மனுக்களை நீதிபதி ஜெ.நிஷாபானு நேற்று விசாரித்தார் . மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அஜ்மல்கான் , ஓய்வு பெற்றவர்களுக்கான ஓய் வூதிய விவரங்கள் இதுவரை அனுப்பப்படவில்லை .

 மனுதாரர்களின் ஓய்வு வரம்பு மார்ச் , ஏப்ரல் மாதங்களாக இருப்பினும் , தற்போது வரை பணியில் உள்ளனர் . அப்படியிருக்கும்போது ஓய்வு வயது அதிகரிப்பு அரசாணை மனுதாரர்களுக்குப் பொருந்தாது என்பது ஏற்க முடியாது என்றார்.அரசுத் தரப்பில் , பதில் அளிக்க  அவகாசம் கோரப்பட்டது . அப்போது குறுக்கிட்ட  அஜ்மல்கான் , ஜூன் மாதம் தொடங்க 2 நாள் மட்டுமே உள்ளது . இதனால் அதற்கு முன்பு மனுதாரர்களைப் பணியில் இருந்து விடுவிக்க அதிக வாய்ப்புள்ளது .

 எனவே மனுதாரர்கள் 5 பேரையும் பணியில் இருந்து விடுவிக்கத் தடை விதிக்க வேண்டும் என்றார் . இதையேற்று மனுதாரர்கள் 5 பேரையும் பணியில் இருந்து விடுவிக்க இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார் , அரசுத் தரப்பில் பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 3 - ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post