இரண்டு மாத மின்சார கட்டணம் எவ்வாறு கணக்கிடப்படும் தெரியுமா?

Join Our KalviNews Telegram Group - Click Here
மின்சார  கட்டணம் எவ்வளவு வரும் என்கிற சந்தேகம் மக்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, வீடுகளில் 'கரண்ட் ரீடிங்' எடுக்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளதால், மார்ச் மாதத்துக்கான 'கரண்ட் பில்' கட்டுவது தொடர்பாக நுகர்வோருக்கு மின்சார வாரியம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இரண்டு மாதம் மின்சார அலகுகளை ஒன்றாக இணைத்து கணக்கிடும்போதும் அலகின் வரம்புகள் காரணமாக மின்சார கட்டணங்களை அதிகரிக்கக்கூடும் என மக்கள் மத்தியில் சந்தேகம் நிலவுவதால் மின்சார துறை யின் தலைவர் இது குறித்து தெளிவுபடுத்தியுள்ளார்.
அதன்படி, கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, 2020 மார்ச் மாத பட்டியலுக்கு, 22 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை, மீட்டர் ரீடிங் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஜனவரி, பிப்ரவரி மாத கணக்கீட்டின்படியே, நுகர்வோர் பணம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறார்கள்.
கூடுதலாகவோ, குறைவாகவோ செலுத்தப்படும் கட்டணம், பின்வரும் மாத கணக்கீட்டு மின்கட்டணத்தில் சரி செய்யப்படும்.
கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மின்கட்டணத்தை செலுத்த நுகர்வோர் நேரடியாக மின்வாரிய அலுவலக மையங்களுக்கு வருவதை தவிர்த்து, இணையதளம், மொபைல் செயலி ஆகியவற்றின் மூலம் மின்கட்டணத்தை செலுத்த அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள வீடுகள், கடைகளில் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மின் ஊழியர்கள் கரண்ட் ரீடிங் எடுத்து வருகின்றனர்.
95771155_2933705073417132_7419135711225315328_n
இந்த பயனுள்ள தகவலை அனைத்து வாட்ஸ்அப் குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்..

கருத்துரையிடுக

0 கருத்துகள்