Title of the document
10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு 12 ஆயிரமாக தேர்வு மையங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். ஈரோடு மாவட்டம் கோபியில் அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:  10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு 5012 தேர்வு மையங்கள் மட்டுமே இருந்த நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக தற்போது 12 ஆயிரமாக தேர்வு மையங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. மேலும் மாணவர்கள் வசிக்கும் பகுதியிலேயே தேர்வு எழுத நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்த மாணவர்கள் தற்போது வீடுகளுக்கு சென்றுள்ளனர். அவர்களை மூன்று நாட்களுக்கு முன் அழைத்து வந்து உணவு வசதியுடன் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்படும்.


 மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் இ-பாஸ் வழங்கப்படும். இ-பாஸ் வழங்குவதில் தடை ஏற்படாத வகையில் தனி கவனம் செலுத்தப்படும். நுழைவுச்சீட்டு ஆன்லைன் மூலமாக வழங்கப்படும்.சட்டீஸ்கர் போன்ற மாநிலங்கள் மலை பிரதேசம் என்பதால், அங்கு 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு இருக்கலாம். தமிழகத்தில் தேர்வு ரத்து செய்யப்படமாட்டாது. கூடுதல் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளதால், அனைத்து ஆசிரியர்களும் தேர்வு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அதற்காக 21ம் தேதி அனைத்து ஆசிரியர்களும் பணிக்கு வர உத்தரவிடப்பட்டுள்ளது. ஒரு தேர்வு அறைக்கு 20 மாணவர்கள் என்ற நிலையை மாற்றி ஒரு அறைக்கு 10 மாண
வர்கள் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள்.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post