Title of the document
புதிதாக மொழிகளைக் கற்றுக் கொள்வதென்பது ஒரு புறம் புதிய அனுபவமாக அமைகிறது. மறுபுறம் அது சிறப்பான வேலை வாய்ப்புகளைப் பெற்றுத் தரும். உலகமயமாக்கலைத் தொடர்ந்து வெளிநாட்டு மொழிகளை அறிவது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
எனவே இத் துறையில் மறுமலர்ச்சி நிலவுகிறது என்றே கூறலாம். மொழி பெயர்ப்பு, ஆன்லைன் ஜர்னலிசம் போன்ற கதவுகள் புதிது புதிதாக திறக்கப்படுகின்றன. எனவே வெளிநாட்டு மொழிகளை அறிவதால் நீங்கள் பின் வரும் துறைகளில் நுழைய முடியும்.
சாதாரணமான மொழி பெயர்ப்பு
டெக்னிகல் மொழி பெயர்ப்பு
ஆய்வு மற்றும் டாகுமெண்டேஷன்
இன்டர்பிரடேஷன்
பயிற்றுவித்தல்
எனவே மொழிகளில் பட்டப்படிப்பு அல்லது டிப்ளமோ அல்லது சான்றிதழ் பெறுவதும் மொழிகளில் திறன் பெறுவதும் பயன் தரும்.
மொழிகளை அறிபவருக்குத் தூதரகங்கள், கலாசார மையங்கள், பெரிய வணிக நிறுவனங்கள், சுற்றுலாத் துறை நிறுவனங்கள், ஏற்றுமதி நிறுவனங்கள், பதிப்பகங்கள், பத்திரிகைகள் மற்றும் இணைய தளங்கள் ஆகியவற்றில் நல்ல வேலை வாய்ப்புகள் உள்ளன.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post