Title of the document

கோடைக்காலத்திற்கேற்ற குளு குளு டிப்ஸ்!

🌟 முலாம்பழத்தை கோடைக்காலத்தில் சாப்பிட்டால் உடல் குளிர்ச்சியாகும். முலாம்பழத்தின் விதைகளை நீக்கி, துண்டுகளாக்கி, சர்க்கரை மற்றும் பால் சேர்த்து, ஜூஸாக்கி பருகினால் உடலுக்கு தேவையான நீர்ச்சத்தைப் பெறலாம்.
🌟 வெயில் காலத்தில் நுங்கு அருமருந்தாகும். நுங்கை தோல் நீக்கி, பால், ஏலக்காய் மற்றும் சர்க்கரை ஆகியவற்றைச் சேர்த்து மிக்ஸியில் அரைத்து வெயிலுக்கு பருகினால் இதமாக இருக்கும்.

சப்போட்டா

🌟 சப்போட்டா பழத்தை தோல் மற்றும் விதையை நீக்கி, சிறிது பாலும், தண்ணீரும் சேர்த்து, மிக்ஸியில் அரைத்து வடிகட்டி, சர்க்கரை சேர்த்து பருகினால், இரத்தம் விருத்தியாகும், மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் கோடைக்காலத்தில் வராது. 

மாமபழம்

🌟 மாம்பழத்துடன் பால் மற்றும் சர்க்கரை சேர்த்து, மிக்ஸியில் அரைத்து பருகினால், உடலுக்கு தேவையான சக்திகள் கிடைக்கும்.
🌟 கோடைக்காலத்தில் பழ வகைகள் இருந்தால், எல்லாவற்றையும் சிறு சிறு துண்டுகளாக்கி, சிறிது சர்க்கரை, மில்க்மெய்டு கலந்து குளிர்ச்சாதனப்பெட்டியில் வைத்து, தேவைப்படும்போது எடுத்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு தேவையான நீர்ச்சத்தைப் பெறலாம்.
🌟 தினமும் கோடைக்காலத்தில் ஐஸ்கட்டியால், முகத்திற்கு ஒத்தடம் கொடுத்து வந்தால், முகம் பொலிவுடன் இருப்பதோடு, உஷ்ணம் காரணமாக ஏற்படும் சரும பாதிப்புகள் வராது.

 புதினா

🌟 புதினா குளிர்ச்சிமிக்க ஓர் மூலிகைப் பொருளாகும். மேலும் இது இரத்தத்தை சுத்தம் செய்ய உதவுகிறது. புதினாவில் உள்ள மென்தால் உடலை குளிர்ச்சியுடன் உணர வைக்கும்.

தயிர் 

🌟 கோடையில் தினமும் தயிர் பருகி வந்தால், அதில் உள்ள இயற்கையான சத்துக்கள் பல்வேறு நோய்கள் மற்றும் செரிமானப் பிரச்சனைகளை சரி செய்யும்.
🌟 நாள் முழுவதும் வெயிலில் வேலை பார்ப்பவர்களுக்கு முகம் கறுத்து போய்விடும். இவர்கள் பன்னீரை பஞ்சில் நனைத்து முகத்தில் ஒற்றிக்கொள்வதன் மூலம் வெப்பத்தை தணித்துக் கொள்ளலாம்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post