Title of the document
Screenshot_20200514_083152

பள்ளிக் கல்வி இயக்கக நிதிக்கட்டுப்பாட்டு அலுவலரின் செயல்முறைகளில் " 2202.General Education 02. Secondary Education 109. Government Secondary Schools - State's Expenditure - BC , KH . Upgradation of Schools under Rashtriya Madhyamik Shiksha Abhiyan . ” என்ற கணக்குத் தலைப்பிற்கு 2020-21 ஆம் ஆண்டுக்கான திட்ட நிதி ஒதுக்கீடு ( Bidget Estimate ) வழங்கப்பட்டுள்ளது.

இணைப்பில் குறிப்பிட்டுள்ளவாறு பெறப்பட்டுள்ள நிதி ஒதுக்கீட்டை அனைத்து மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் / முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் மேற்படி கணக்குத் தலைப்பின்கீழ் நிதி ஒதுக்கீடு 2020-21 ஆம் ஆண்டுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது. சம்பந்தப்பட்ட மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் / முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ள திட்ட மதிப்பீட்டு , நிதி ஒதுக்கீட்டினை உடன் உரிய பள்ளிகளுக்கு பகிர்ந்தளித்து , பகிர்ந்தளித்த விவரத்தினை மாநில திட்ட இயக்குநருக்கு பத்து தினங்களுக்குள் அனுப்பி வைக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. அனைத்து பள்ளிகளுக்கும் தேவைக்கேற்ப நிதி ஒதுக்கீட்டினை பகிர்ந்தளிக்க வேண்டும் எக்காரணம் கொண்டும் சரி சமமாகப் பகிர்ந்தளிப்பதைக் கண்டிப்பாகத் தவிர்த்தல் வேண்டும் எனவும் தெரிவிக்கலாகிறது.

இச்செயல்முறைகள் பெற்றுக் கொண்டமைக்கு உரிய ஒப்புதலை உடன் அனுப்பி வைக்குமாறு அனைத்து மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் / முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post