தனியார் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களுக்கு ஏப்ரல் மாத ஊதியத்தை உடன் வழங்க உத்தரவு.

Join Our KalviNews Telegram Group - Click Here
அனைத்து மெட்ரிக் / சுயநிதி / மழலையர் மற்றும் துவக்கப்பள்ளிகள் / சி.பி.எஸ்.இ மற்றும் பிறவாரிய பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்கள் / பணியாளர்களுக்கான ஏப்ரல் 2020 மாதத்திற்கான ஊதியத்தினை எவ்வித காலதாமதமும் இன்றி உடன் வழங்கிடவும்  அதன் விவரத்தினை பெற்று தொகுத்து அனுப்பிட தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்கநர் / தமிழ்நாடு மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குநர் / தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே அனைத்து பள்ளியில் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்கள் / பணியாளர்களுக்கான ஏப்ரல் 2020 மாதத்திற்கான ஊதியத்தினை எவ்வித காலதாமதமும் இன்றி உடன் வழங்கிவிட்டு அதன் விவரத்தினை சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலருக்கு அனுப்பிடவும் அனைத்து வகை தனியார் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Screenshot_20200501_224245
இந்த பயனுள்ள தகவலை அனைத்து வாட்ஸ்அப் குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்..

கருத்துரையிடுக

0 கருத்துகள்