Title of the document
IMG_ORG_1588072421044

சீனாவில் கொரோனா நோய் தொற்று குறைந்திருக்கும் நிலையில், அதற்கான முன்னெச்சரிக்கைகளுடன் சுமார் மூன்று மாதங்களுக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.


சீனாவில் கொரோனா வைரஸ் கடந்த ஆண்டின் டிசம்பர் மாதத்தில் முதன்முதலில் கண்டறியப்பட்டது. என்ன நோய் என்ற கண்டுபிடிக்கவே சுமார் 15 நாட்களுக்கு மேல் ஆனது. அதற்குள் கொத்துக்கொத்தாக பல உயிர்களை கொரோனா பறித்தது.

சமூக விலகலை பின்பற்றினால் மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என்பதை சீனா நம்பியது. இதையடுத்து மக்கள் வெளியே வரக்கூடாது என்ற கடும் கட்டுப்பாடுகளை விதித்தது. அனைத்து வகையான போக்குவரத்தும் முடங்கிப் போயின. பாதிக்கப்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டனர். இதற்காகவே சிறப்பு முகாம்கள் தற்காலிகமாக அமைக்கப்பட்டன.

வெளியே செல்ல அனுமதி இல்லை என்பதால் தேவையான பொருட்களை வாங்க புதிய வழிமுறைகளை சீன அரசு பின்பற்றும் படி அறிவுறுத்தியது. குடியிருப்பில் வசிப்பவர்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி வர ஒரு நபர் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது.

தொழில்நுட்பத்தின் மூலம் முகத்தை அடையாளம் காணும் வகையில் ஆப்பை தயாரித்தது. அதன் மூலம் மக்களின் நடமாட்டத்தை கண்காணித்தது. 75 நாட்கள் வரை ஊரடங்கு அமலில் இருந்தது. இதற்கு பலனாக மக்கள் கொரோனாவின் பிடியிலிருந்து தப்பினர்.

தனித்தனியாக அமர்ந்து படிக்கும் சீனா மாணவர்கள்



கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்குப் பிறகு சீனாவில் உள்ள பெரும்பாலான பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. எனினும் வகுப்பறைகளில் மாணவர்கள் அமர்வதில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக இடைவெளி விட்டு தனித்தனியாகவே மாணவர்கள் அமர வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.


கட்டாயம் முகக்கவசம் அணிந்து தான் பள்ளிக்கு வரவேண்டும் என்றும் அனைத்து பள்ளி நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. வகுப்பறையில் இருப்பவர்கள் பாதியாக பிரிக்கப்பட்டு பாடங்கள் தனித்தனியாக நடத்தப்படுகிறது. இவை அனைத்தும் இன்னும் 15 நாட்கள் வரை மட்டுமே என சீன அரசு தெரிவித்துள்ளது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post