நியுசிலாந்து அரசின் வெளியுறவு விவகாரம் மற்றும் வணிகத் துறை
சார்பில் நியுசிலாந்து காமன்வெல்த் ஸ்காலர்ஷிப்க்கான அறிவிப்பு
வெளியிடப்பட்டுள்ளது.
அறிவு, திறமை
மற்றும் தகுதிகளைக் கொண்டு, வளரும் நாடுகளின் பொருளாதார, சமூக மற்றும்
அரசியல் மாற்றங்களில் பங்குபெற விரும்புபவர்களுக்கு இந்த உதவித்தொகை
வழங்கப்படுகிறது.
துறைகள்: கிளைமேட்
ஜேன்ஞ், கிளைமேட் ஜேன்ஞ் சயின்ஸ், ரூரல் டெவெலப்மென்ட், வாட்டர்
மேனேஜ்மென்ட், நேச்சுரல் ரிசோர்ஸ் மேனேஜ்மென்ட், டிசாஸ்ட்டர் மேனெஜ்மென்ட்,
எமர்ஜென்சி மேனெஜ்மென்ட், ஜியோலஜி, ஜியோடெக்னிக்கல் இன்ஜினியரிங்,
அக்ரிகல்ச்சுரல் டெக்னாலஜி, அக்ரிபிசினஸ், அக்ரிகாமர்ஸ், அக்ரிகல்ச்சுரல்
சயின்ஸ், பயோசெக்யூரிட்டி, பார்ம் மேனெஜ்மென்ட், ஹார்ட்டிகல்ச்சர், புட்
டெக்னாலஜி, சப்ளை சயின் மேனெஜ்மென்ட், சோலார், ஹைட்ரோ-எலக்ட்ரிக் அண்டு
விண்ட் எனர்ஜி, எனர்ஜி இன்ஜினியரிங், ரினீவபில் எனர்ஜி, டிஸ்ட்ரிபியூசன்
சிஸ்டம்ஸ், எனர்ஜி எக்னாமிக்ஸ், எனர்ஜி எபீசியன்சி, எனர்ஜி செக்டார்
ரிபார்ம்ஸ் அண்டு மேனெஜ்மென்ட், கவர்னன்ஸ், பப்ளிக் செக்டார் ஆடிட்டிங்,
பப்ளிக் பினான்சியல் மேனெஜ்மென்ட், பப்ளிக் மேனெஜ்மென்ட், பப்ளிக் பாலிசி
மற்றும் ஸ்டேடிஸ்டிக்ஸ்.
படிப்பு நிலைகள்: முதுநிலை மற்றும் பிஎச்.டி., படிப்புகள்
தகுதிகள்: இந்திய குடிமகனாக இருப்பதோடு, விண்ணப்பிக்கும் படிப்பிற்கு ஏற்ப உரிய கல்வித் தகுதிகளை பெற்றிருக்க வேண்டும்.
தேவைப்படும் ஆவணங்கள்:
10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், இளநிலை
பட்டப்படிப்பிற்கான சான்றிதழ். பிஎச்.டி., படிப்பிற்கு விண்ணப்பிக்கும்
மாணவர்கள், முதுநிலை பட்டப்படிப்பிற்கான சான்றிதழையும் சமர்ப்பிக்க
வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
http://proposal.sakshat.ac.in/scholarship/ எனும் இந்தியாவின் மத்திய
மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தால் நிர்வகிக்கப்படும் பிரத்யேக இணையதளம்
வாயிலாக இந்த உதவித்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும்.
Post a Comment