
தன்னால் முடிந்தமட்டில் ஒவ்வொரு துறையிலும் பல ஆயிரம் கோடிகளை, இதுவரையில் வாரிச் சென்று இருக்கிறது இந்த கொரோனா என்னும் அரக்கன்.
கடந்த
ஆண்டிலேயே இறக்குமதி வரி அதிகரிப்பினால் பெரும் பாதிப்புக்கு உண்டான நகைத்
துறை, தற்போது கொரோனாவில் பல மடங்கு அடி வாங்கியுள்ளது எனலாம்.

ஏனெனில்
அந்தளவுக்கு கொரோனா வைரஸ் தன் கைவரிசையை காட்டியுள்ளது. இன்னும் தெளிவாக
சொல்லவேண்டுமானால் பிசினஸ் டுடேவில் வெளியான அறிக்கை ஒன்றில், கொரோனா
காரணமாக லாக்டவுன் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், 45 நாட்களில் சுமார்
45,000 கோடி ரூபாய் இழப்பினை நகைத்துறை கண்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

எனினும்
வரவிருக்கும் வாரத்தில் அனுமதிக்கப்பட்ட சில மண்டலங்களில் மட்டும்
மீண்டும் நகை விற்பனையை தொடங்கலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில்
மூன்று மாநிலங்களிலும், ஒரு யூனியன் பிரதேசத்திலும், முதல் கட்டமாக 10
ஷோரூம்களை மட்டும் திறக்க இருப்பதாக கல்யாண் ஜூவல்லர்ஸ் சனிக்கிழமையன்று
தெரிவித்துள்ளது. இவை குறைந்த கட்டுப்பாடுகளை கொண்ட பசுமை மண்டலங்களில்
செயல்படலாம் என்றும் கூறப்படுகிறது.

கர்நாடகாவில்
ஏழு ஷோரூம்கள், ஓரிசா மற்றும் அசாமில் தலா ஒன்றும், புதுச்சேரியில்
ஒன்றும் திறக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. கல்யாண் ஜூவல்லர்ஸ் ஏற்கனவே
அக்ஷய திருதியை சமயத்தில் இருந்து ஐக்கிய அரசு எமிரேட்ஸில் இருந்து 9 தனித்
தனி ஷோரூம்களும், கத்தாரில் 3 ஷோரூம்களும் திறக்கப்பட்டுள்ள நிலையில்,
மத்திய கிழக்கு பகுதிகளிலும் செயல்படத் தொடங்கியுள்ளதாகவும் செய்திகள்
வெளியாகியுள்ளன.

மேற்கண்ட
நாடுகளில் தற்போது தான் சீசன் ஆரம்பமாவதால், தொடங்கியவுடன் தேவை
அதிகரிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதே டாடா குழுமத்தின் டைட்டானின்
இந்தியாவின் முன்னணி நகை பிராண்டான தனிஷ்க், நாடு முழுவதும் தனது 328
கடைகளை ஒரு கட்டமாக மீண்டும் திறக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும்
மே 10 முதல் முதல் 50 கடைகளை திறக்க திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள்
வெளியாகியுள்ளது. இதே கிழக்கு இந்தியாவின் சென்கோ கோல்ட் மற்றும் டயமண்ட்ஸ்
மேற்கு வங்கம், ஒடிசா, அசாம் மற்றும் கர்நாடகா ஆகிய நான்கு மாநிலங்களில்
பச்சை மற்றும் ஆரஞ்சு மண்டலங்களில் 11 கடைகளை திறக்க அனுமதி பெற்று
திறந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில்
அகில இந்தியா ஜெம் அன்ட் ஜூவல்லரியின் தலைவர் அனந்த பத்மநாபன், நாட்டில்
மூன்று லட்சம் நகை விற்பனையாளர்கள் உள்ளனர். அவர்கள் பொதுவாக மாதத்திற்கு
60 -70 டன் மதிப்புள்ள வணிக்கத்தினை செய்து வருகின்றனர். இன்னும் குறிப்பாக
சொல்லவேண்டுமானால் கடைசி 45 நாட்களில் 45,000 கோடி ரூபாய் இழப்பினை
கண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும்
நகை அதிகம் விற்கும் பருவமான அக்ஷய திருதியை மற்றும் திருமண பருவத்தில்
அதிக இழப்புகளை சந்திக்கக் கூடும். மக்கள் கடைகளுக்கு வரத் தொடங்கினாலும்
கூட ஜூன் ஜூலை மாதங்களுக்கு பிறகு தான் வணிகம் இயல்பு நிலைக்கு திரும்பக்
கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கர்நாடகா போன்ற மாநிலங்களில் இந்த
வாரம் கடைகள் திறக்க அனுமதித்துள்ளன.

எனினும்
நகை வடிவமைப்பாளார்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளதால், அவர்கள்
திரும்பி வர 30 - 45 நாட்கள் ஆகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த
தொழில் நாடு முழுவதும் ஒரு கோடி வடிவமைப்பாகர்களை பயன்படுத்துகிறது. ஆக
இப்படியாக பல சவால்களுக்கும் மத்தியில் தான் விற்பனையை தொடங்கியுள்ளதாக
கூறப்படுகிறது.

Post a Comment