வெப்பநிலை படிப்படியாக உயரும் ​ வானிலை ஆய்வு மையம் தகவல்

Join Our KalviNews Telegram Group - Click Here
தகவல் ​ தமிழகத்தில் வரும் நாட்களில் வெயில் தாக்கம் படிப்படியாக அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி கள் கூறியதாவது: 
தமிழகத்தில் அதிகபட்சமாக கரூர், திருச்சியில் தலா 104 நேற்று பாரன்ஹீட் வெப் பம் பதிவானது. மதுரையில் 103, சேலத்தில் 102, திருத்தணி, நாமக் கல், தருமபுரி மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் தலா 100 பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. 
 இந்நிலையில் வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்கள் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யும். தெற்கு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளது. 
மழை நேரங்களில் இடி மற்றும் மின்னல் தாக்கம் காணப்படும் என்பதால் மக்கள் கவனமாக இருக்க வேண்டும். வரும்நாட்களில் மழை குறைந்து வெப்பம் படிப்படியாக உயரும்.
அக்னி நட்சத்திரம் நாளை தொடக்கம்
இதற்கிடையே தெற்கு அந்த மான் ஒட்டிய வங்கக்கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை அடுத்த 24 மணி நேரத்தில் பலமடைந்து வடமேற்கு திசையில் நகரும். 
இதனால் வங்கக்கடல் பகுதியில் மணிக்கு 70 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும். எனவே, மே 6 வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண் டாம். இவ்வாறு அவர்கள் கூறினர். இதற்கிடையே கோடைக்கால உச்சமான அக்னி நட்சத்திரம் நாளை (ஏப்ரல் 4) தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த பயனுள்ள தகவலை அனைத்து வாட்ஸ்அப் குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்..

கருத்துரையிடுக

0 கருத்துகள்