Title of the document
மே மாத சம்பளம் வழங்க வேண்டும்' என, பகுதி நேர ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு, மாநில ஒருங்கிணைப்பாளர், செந்தில்குமார் அறிக்கை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, 2012 ஆம் ஆண்டில், அரசு பள்ளி மாணவர்களுக்கு பாடத்திட்டத்தோடு, கல்விஇணைச்செயல்பாடும் முக்கியம் என கருதி உடற்கல்வி, ஓவியம், கணினிஅறிவியல், இசை, தையல், தோட்டக்கலை, கட்டிடக்கலை, வாழ்வியல்திறன்கல்வி என 8 சிறப்பு பாடங்களில் 16 ஆயிரத்து, 549 பகுதிநேர ஆசிரியர்களை, 5,000 ரூபாய் தொகுப்பூதியத்தில் நியமித்தார். ஓராண்டிற்கு அனைத்து மாதங்களும் சம்பளம் வழங்க, 99.29 கோடி ரூபாய் ஒதுக்கினார். ஆனால், பணி நியமனம் செய்த பின், மே மாதம் சம்பளம் தருவதில்லை. அரசாணையில், 11 மாதங்களுக்கு மட்டும் சம்பளம் என்று குறிப்பிடாத போதும், கல்வித்துறை, ஒரு மாத சம்பளத்தை பிடித்தம் செய்வது வருந்தத்தக்கது. ஒரு மாதம் சம்பளம் இல்லாமல், அடுத்த மாதம், எப்படி குடும்பத்தை நடத்த முடியும். முடிந்துபோன 8 ஆண்டுகளுக்கு மே மாதம் சம்பளம் நியாயமாக கிடைத்திருக்க வேண்டும். ஆனாலும் தரவில்லை. ஆரம்பத்தில் தரப்பட்ட ரூ.5ஆயிரம் சம்பளம், தற்போது ரூ.7700ஆக தரப்படுகிறது. 10கோடி மாதம் ஒன்றிற்கு சம்பளம் தர அரசு செலவிடுகிறது. பணியில் சேர்ந்து 9வது ஆண்டு மே மாதம் நடக்கிறது. இம்மாதம் சம்பளம் கிடைக்க சமக்ர சிக்சா மாநில திட்ட இயக்குனர் நிதி கேட்டு அரசுக்கு வேண்டுகோள் வைக்க வேண்டும். பள்ளிக்கல்வி அமைச்சர் பரிந்துரை செய்ய வேண்டும். நிதி அமைச்சர் ஒப்புதல் தர வேண்டும். முதல்வர் ஆணையிட வேண்டும். அனைவரும் ஒருங்கிணைந்து உதவினால் மட்டுமே மே மாதம் சம்பளம் பிரச்சனைக்கு தீர்வு ஏற்படும். ஆனால் அரசு இது குறித்து என்ன நிலையில் உள்ளது என தெரியவில்லை. தற்போது ஊரடங்கால், பகுதி நேர ஆசிரியர்கள், வாழ்வாதாரம் இழந்து உள்ளனர். எனவே இம்முறை மே மாதம் சம்பளம் தமிழகஅரசு கொடுக்க, வேண்டுகோள் வைத்து எதிர்பார்த்து வருகிறோம். இதற்கு, முதல்வர் நிதி ஒதுக்கி, நியமனம் செய்த 16549 பேரில் தற்போதுள்ள 12 ஆயிரம் பேருக்கு, மே மாத சம்பளம் வழங்க, உத்தரவிட வேண்டும். இவ்வாறு, அவர் கூறியுள்ளார். # இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post