Title of the document
புதுடெல்லி: தங்கம் இறக்குமதி கடந்த ஏப்ரல் மாதத்தில் 99.9 சதவீதம் சரிந்துள்ளது எனவும், வெறும் 50 கிலோ மட்டுமே இறக்குமதி செய்யப்பட்டுள்ளது எனவும் மத்திய அரசு புள்ளி விவரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில், ''நிதியமைச்சக புள்ளி விவரங்களின்படி, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இந்தியாவில் 110.18 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டது. ஆனால், கடந்த மாதத்தில் 50 கிலோ தங்கம் மட்டுமே இறக்குமதி ஆகியுள்ளது. 99.9 சதவீதம் சரிந்துள்ளது. மதிப்பு அளவில், கடந்த ஆண்டு ஏப்ரலில் 397 கோடி டாலர் (சுமார் 30,172 கோடி) மதிப்பிலான தங்கம் இறக்குமதியானது. தற்போது 28.4 லட்சம் டாலராக (சுமார் 2,159 கோடி) சரிந்து விட்டது. இது கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத சரிவாகும்'' என்றார். கடந்த ஜனவரி - மார்ச் காலாண்டிலேயே தங்கம் இறக்குமதி 36 சதவீதம் சரிந்தது. இது 11 ஆண்டில் இல்லாத சரிவாகும்.

மேற்கண்ட காலாண்டில் இந்தியாவில் தங்கத்தின் தேவை 101.9 டன்களாக குறைந்து விட்டதாக உலக தங்க கவுன்சில் தெரிவித்திருந்தது. ஆபரண தேவை 41 சதவீதம், தங்கத்தின் மீதான முதலீடுகள் 17 சதவீதம் குறைந்தன. தற்போது தங்கம் இறக்குமதி சரிந்ததற்கு கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பு, ஊரடங்கு மற்றும் சர்வதேச விமான போக்குவரத்து முடக்கம் ஆகியவை காரணமாக கருதப்படுகிறது. கொரோனாவால் பொருளாதாரம் மேலும் சரியும் என்பதாலும், சர்வதேச சந்தையில் தங்கம் விலை உயர்ந்து வருவதாலும் தங்கத்தின் தேவை மற்றும் இறக்குமதி இந்த ஆண்டு சரிவிலேயே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

* கடந்த ஆண்டு ஏப்ரலில் 110.18 டன் தங்கம் இறக்குமதி. இது கடந்த மாதம் 50 கிலோவாக சரிந்துள்ளது.
* பொருளாதார மந்தநிலை, சர்வதேச சந்தையில் தங்கம் விலை உயர்வால் இந்தியாவில் தங்கத்தின் தேவை குறைந்து வருகிறது.
* ஆபரண தேவை 41 சதவீதம், தங்கத்தின் மீதான முதலீடுகள் 17 சதவீதம் குறைந்து விட்டது. அட்சய திருதியையிலும் விற்பனை இல்லை
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post