கொரோனா தொற்றின் பாதிப்பு மேலும் இரண்டு ஆண்டுகள் நீடிக்க வாய்ப்புள்ளது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸூக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய
நாடுகளில் ஏராளமான மக்கள் உயிரிழந்துள்ளனர். இன்னும் எத்தனை காலம் இந்த
வைரஸ் தாக்கும் இருக்கும் என்ற கேள்விகள் அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது.
இந்நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்புகள் இன்னும் இரண்டு ஆண்டுகள் வரை
நீடிக்க வாய்ப்புள்ளதாக அமெரிக்காவின் மின்னசோட்டா பல்கலைக்கழக
ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். பலருக்கும் நோய் தொற்றின் அறிகுறியே
இல்லாததால், கொரோனா வைரஸின் பரவலை கட்டுப்படுத்துவது கடினம் என்று
அப்பல்கலைக்கழகத்தின் தொற்று நோய் ஆராய்ச்சி பிரிவினர் கூறியுள்ளனர்.
Post a Comment