Title of the document
 https://assets-news-bcdn.dailyhunt.in/cmd/resize/400x400_60/fetchdata15/images/99/b9/07/99b90762720438a46abe2093fd6a72f5.jpg

மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் இந்திய பங்குசந்தை கட்டுப்பாடு (SEBI) நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கக் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.



SEBI நிறுவனத்தில் காலியாக உள்ள உதவி மேலாளர் கிரேடு ஏ பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வந்தன. மொத்தம் 147 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 30 ஆம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், கொரோனா நோய் தொற்று பாதிப்பு காரணமாக SEBI உதவி மேலாளர் பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, மே 31 ஆம் தேதி வரையில் மேற்குறிப்பிட்ட பணிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.




காலிப் பணியிட விபரங்கள்:
மொத்த காலிப் பணியிடங்கள் : 147
பணியிட விபரங்கள்
பொது- 80, சட்டம் - 34, தகவல் தொழில்நுட்பம் - 22, சிவில் இன்ஜினியர் - 1, எலெக்ட்ரிக்கல் இன்ஜினியர் - 4, ரிசர்ச் - 5, அதிகாரப்பூர்வ மொழி - 1 ஆகும்
வயது வரம்பு:
மேற்குறிப்பிட்ட பணிக்கு 1 மார்ச் 1990 தேதியின் வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி, விண்ணப்பதாரர்கள் 30 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.sebi.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தினை காணவும்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post