அகில இந்திய மாநில அரசு நான்காம் பிரிவு ஊழியர்கள் சம்மேளத்தின் தலைவர் கே.கணேசன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாக்கும் பணியில் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், விடுமுறை எடுக்காமல் தொடர்ந்து மக்கள் பணியாற்றி தங்களுடைய விடுப்பினை சேமித்து வைத்து ஆண்டுக்கு ஒருமுறை சமர்ப்பித்து (சரண்டர் செய்து) அதனை பணமாக காலம் காலமாக பெற்று வந்தார்கள்.
அதனை தமிழக அரசு நிறுத்தி வைத்திருப்பது கண்டிக்கத்தக்கதாகும். மேலும், விலைவாசியை கருத்தில் கொண்டு அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது.
தற்போது வீட்டிற்குள்ளே அடைத்து வைத்தும் விலைவாசி ஏற்றம் இருக்கிற சூழலில் அகவிலைப்படியை நிறுத்தி வைத்திருப்பதும் ஏழை, எளிய பணியாளர்களாக பணியாற்றும் டி பிரிவினருக்கு மிகுந்த பாதிப்பையும், மன உளைச்சலையும் உருவாக்கும்.
எனவே, தமிழக முதல்வர் மேற்படி உத்தரவை மறுபரிசீலனை செய்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அகநிலைப்படி மற்றும் சரண் விடுப்பு தொகையை தடையின்றி வழங்க, உடனே உத்தரவிட வேண்டும்.
Nothing neeed. My family also in govt job..
ReplyDeletePost a Comment