Title of the document
இன்று நாம் வீட்டில் முடங்கியிருக்கும் காலகட்டத்தில் தொலைக்காட்சிகளில் சில நிகழ்ச்சிகளை பார்க்கும்போது எரிச்சலூட்டுகின்றன அப்படி இருக்க பல பயனுள்ள செயலிகள்,யூடியூப் லிங்குகள், வலைத்தளங்கள் போன்றவற்றை தொகுத்துள்ளேன்..பலரும் நேரமே போகமாட்டேங்கிதுனு புலம்பல்களை கேட்டதன் விளைவாக இந்த தொகுப்பு மேலும் போட்டி தேர்வு படிக்கும் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

செயலிகள் (Apps):

Blinkist : புதினங்கள் அல்லாத சுய முன்னேற்றம், அறிவியல் போன்ற மற்ற புத்தகங்களின் சுருக்கங்களை கொண்ட ஒரு செயலி. இதில் ஒலிப்புத்தகங்களும் அடங்கும்

TED : இதைப்பற்றி பலரும் அறிந்திருப்பர். இதன் செயலியை டவுன்லோட் செய்து கொஞ்சம் கொஞ்சமாக நமக்கு பிடித்த வீடியோக்களை ஒரு Playlistஆக உருவாக்க ஆரம்பித்தால் நம்முடைய விருப்பத்திற்கு ஏற்றவாறு பரிந்துரைக்கும்

Curiosity : நாம் நினைத்தே பார்க்காத பல சுவாரஸ்யமான தகவல்களை படிக்கலாம்

DailyArt தினமும் ஒரு ஓவியம் மற்றும் அந்த ஓவியத்தின் பின் இருக்கும் வரலாற்றை பற்றி கூறும் செயலி.

CuriosityStream டாக்குமெண்டரி வீடியோக்களின் இருப்பிடம் என்றே சொல்லலாம்.‌ அவ்வளவு இருக்கும்.‌

Reddit : இந்த செயலி கிட்டத்தட்ட கோரா போல தான். கேள்வி கேட்டால் பதில் கிடைக்கும். ஆனால் ஒரு சில நாட்கள் பிடிக்கும் புரிவதற்கு. கொஞ்சம் கொசகொச என்று இருப்பது போல் கூட தோன்றும்

Stack Exchange இதுவும் கோரா, ரெட்டிட் போல் தான். கேள்விகளுக்கு பதில் கிடைக்கும்வலைத்தளங்கள்:


Wikipedia : “அட என்ன தம்பி நீ?! இது கூட தெரியாதா?” என்று நீங்கள் நினைப்பது கேட்கிறது. ஆனால் வீக்கிப்பீடியாவில் முதல் பக்கத்தில் தினம் ஒரு புதிய தகவலை Featured article என்று போடுவார்கள். இதை தினமும் படித்தாலே ஒரு வருடத்தில் 300+ விஷயங்களை கற்றுக்கொள்ளலாம். இது பலருக்கு தெரிவதில்லை.

Wayback Machine மிக பழைய மற்றும் புதிய புத்தகங்கள் கூட பல கிடைக்கும்.

Top Documentary Films இதுவும் ஒரு டாக்குமெண்டரி களஞ்சியம்

Listverse டாப் 10 இது, டாப் 10 அது, டாப் 10 எது, டாப் 10 ஏதேதோ என்று பட்டியலுக்கெல்லாம் பட்டியலாய் விளங்கும் ஒரு தளம்

Neatorama இணையத்தில் உள்ள சுவாரசியமான விஷயங்களை ஒரே இடத்தில் குவிப்பது தான் இந்த தளம்

HowStuffWorks இதில் பலதரப்பட்ட தலைப்புகள் பற்றி படிக்கலாம்

Mental Floss : அவ்வப்போது சென்று வரலாம் ஏதாவது புதிதாக இருந்து கொண்டே இருக்கும் இத்தளத்தில். ஏற்கனவே அறிவியல், வரலாறு, உணவு, விலங்குகள் என்று பலதரப்பட்ட தலைப்புகளில் நிறைய இருக்கிறது அதையெல்லாம் கூட படித்துக் கொண்டிருக்கலாம்

யூடியுப் சேனல்கள்:

Biography பல பிரபலமானவர்களின் சரித்திரங்களை சுருக்கமாக சொல்லும் ஒரு சேனல்.

Veritasium பல வாழ்க்கை மற்றும் அறிவியல் உண்மைகளை பதிவிடும் ஒரு சேனல்

NASA நாசாவின் official யூடியுப் சேனல்

minutephysics இயற்பியலை அழகாக படமெல்லாம் வரைந்து விளக்குவார்கள். பார்க்கவே ஆசையாக இருக்கும்


TEDx Talks TED என்பது உலகளாவிய மக்களை கருத்தில் கொண்டு பேசுவது TEDx என்பது எந்த ஊரில் நடக்கிறதோ அந்த ஊர் மக்களை கருத்தில் கொண்டு பேசுவது. இதில் இருக்கும் வீடியோக்களும் அருமையாக இருக்கும்

DOCUMENTARY TUBE மறுபடியும் டாக்குமெண்டரி வீடியோ விரும்பிகளுக்கான ஒரு புதையல்

SciShow தினம் ஒரு அறிவியல் தகவல்

Kurzgesagt – In a Nutshell இதுவும் அறிவியல் பற்றி பேசும் ஒரு சேனல். இந்த சேனலின் Animationகாகவே மெய்மறந்து பார்ப்பேன்


Numberphile எண்கள் எண்கள் எண்கள் மட்டுமே! எண்களை பற்றிய வீடியோக்கள்

Big Think ஏதாவது ஒரு தலைப்பு பற்றி தினமும் இந்திய நேரப்படி மாலை 3:30 மணிக்கு பதிவிடுவார்கள்

IT'S HISTORY வரலாற்றில் நடந்த அனைத்தை பற்றியும் பதிவிட வேண்டும் என்ற நோக்கோடு செயல்படும் ஒரு சேனல்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Previous Post Next Post