ராமநாதபுரம்: முதுகுளத்துார் பகுதி மாணவர்கள், 25 பேர், மும்பையில் தவித்து வருகின்றனர்.
ராமநாதபுரம்
மாவட்டம், முதுகுளத்துாரைச் சேர்ந்த டிப்ளமோ படித்த மாணவர்கள், 25 பேர்
மேற்படிப்பிற்காக, மஹாராஷ்டிர மாநிலம், ஹிங்கோலி மாவட்டத்தில் தங்கி, எட்டு
மாதங்களாக படிக்கின்றனர். ஊரடங்கு உத்தரவால், அங்குள்ள கல்வி நிலையங்கள்
மூடப்பட்டுள்ளன.
மாணவர்கள் தங்கியிருந்த
விடுதிகளும் பூட்டப்பட்டன. இந்நிலையில், உணவு, குடிநீர் கிடைக்காமல், 25
பேரும் தவிக்கின்றனர். சொந்த ஊருக்கு திரும்ப, வாகனம் தயார் செய்யப்பட்ட
நிலையில், ராமநாதபுரம் கலெக்டர் அனுமதிக்காக காத்திருக்கின்றனர்.
மாணவர்களின் உறவினர்கள், &'கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்&'
என தெரிவித்துள்ளனர்.
Post a Comment