புதுடில்லி; பிரதமர் நிவாரண நிதிக்கு, குழந்தைகள் தங்கள் சேமிப்பை அள்ளி வழங்கி வருகின்றனர்.
குஜராத்
மாநிலம், பரூச் மாவட்டம், அங்லேஷ்வர் நகரை சேர்ந்த சிறுமி, பாரிஸ் வியாஸ்,
4, உண்டியலில் சேர்த்து வைத்திருந்த, 11,200 ரூபாயை, கொரோனா தடுப்புக்கான,
பிரதமர் நிவாரண நிதிக்கு, வழங்கியுள்ளார். இதேபோல், ஆமதாபாதை சேர்ந்த,
மூன்று சிறுவர்கள், போலீஸ் நிலையத்துக்கு சென்று, தாங்கள் சேர்த்து
வைத்திருந்த, 5,500 ரூபாயை வழங்கினர்.
ராஜஸ்தான்
மாநிலம், ஜெய்ப்பூரை சேர்ந்த மாற்று திறனாளியான ஹிரிதயேஷ்வர் சிங் பட்டி,
17, கடந்த ஆண்டு, &'பிரதம மந்திரி ராஷ்ட்ரீய பால் சக்தி&' விருது
பெற்றார். விருது தொகையாக, 2 லட்சம் ரூபாயை, பிரதமர் நிவாரண நிதிக்கு
வழங்க, ஹரிதயேஷ்வர் சிங் முடிவு செய்துள்ளார். உ.பி., மாநிலம், லக்னோவை
சேர்ந்த, 10, 6 வயது குழந்தைகள் தலா, 5,000 ரூபாய் உண்டியல் பணத்தை
வழங்கியுள்ளனர்.
Post a Comment