Title of the document
குறைந்த வட்டியில் சிறப்பு நகை கடன் திட்டம் கூட்டுறவு வங்கி அறிமுகப்படுத்தியது 
 கொரோனா பரவுவதை தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக பொதுமக்களிடையே இருந்த கையிருப்பு கரைந்து, பணப்புழக்கம் வெகுவாக குறைந்துள்ளது. இதனை பயன்படுத்தி கந்து வட்டிக்காரர்கள் அதிக வட்டி வசூலித்து வருகின்றனர். 
எனவே பொதுமக்களின் நலன் கருதி அவர்களின் உடனடி தேவையை குறைந்த வட்டியில் நிறைவேற்றும் பொருட்டு, தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியில் கொரோனா சிறப்பு நகை கடன் என்ற புதிய திட்டம் நேற்று முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி குறைந்தபட்சம் ரூ.25 ஆயிரமும், அதிகமாக ரூ.1 லட்சமும் கடன் வழங்கப்படும். 
தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.3 ஆயிரத்து 300 வழங்கப்படும். ஆண்டு வட்டி 6 சதவீதம். ஆயிரம் ரூபாய்க்கு மாத வட்டி ரூ.5 மட்டுமே. கடனை திருப்பி செலுத்தும் காலம் 3 மாதங்கள். கூடுதலாகவும் 3 மாத அவகாசம் வழங்கப்படும். பரிசீலனை கட்டணம் 1 சதவீதம் மற்றும் ஜி.எஸ்.டி. வசூலிக்கப்படும். ரூ. 2 லட்சத்துக்கான பிரதமரின் விபத்து காப்பீடு இலவசம். 
மேற்கண்ட தகவல் தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 
 துளிர்கல்வி வாசக நண்பர்களுக்கு வணக்கம், இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் தயவுசெய்து SHARE செய்ய மறக்க வேண்டாம்! நட்பில் இணைந்திருங்கள்! நன்றி!!!
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post