Title of the document
பிளஸ் 2விற்குப் பின் நாடிகல் சயின்ஸ் படிப்பில் பி.எஸ்சி., முடிப்பவர்கள் இப்பணிக்குச் செல்வதற்குத் தகுதியானவர்கள். பொதுவாக இப் படிப்பு 3 ஆண்டு படிப்பாக நடத்தப்படுகிறது. பிளஸ் 2ல் இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் படித்திருப்பவர்கள் இப் படிப்பில் சேரலாம். ஆங்கிலத்தில் குறைந்தது 50 சதவீதம் மதிப்பெண் பெற்றிருப்பதுடன் 25 வயதுக்குள் இருப்பதும் முக்கியம்.சிறப்பான கண் பார்வையைப் பெற்றிருக்க வேண்டும். நிறக் குருடாக இருப்பவரும் கண்ணாடி அணிந்திருப்பவரும் இப் பணிக்குச் செல்ல முடியாது. மருத்துவத் தகுதியும் பெற்றிருக்க வேண்டும்.
மதுரையிலுள்ள ஆர்.எல்.இன்ஸ்டிடியூட் ஆப் நாடிகல் சயின்ஸ் நிறுவனம் நம் மாநிலத்தில் இப் படிப்பைத் தரும் சிறப்பான கல்வி நிறுவனமாக விளங்குகிறது. 4 ஆண்டுகளையும் 8 செமஸ்டர்களையும் கொண்ட பி.எஸ்சி., நாடிகல் சயின்ஸ் படிப்பை ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பிலானியில் செயல்படும் பிட்ஸ் பிலானி நிறுவனத்துடன் இணைந்து ஆர்.எல். இன்ஸ்டிடியூட் நிறுவனம் நடத்துகிறது. எனவே பட்டத்தை பிலானியிலுள்ள பிட்ஸ் நிறுவனமே தருகிறது.
மெர்ச்சண்ட் நேவி எனப்படும் தனியார் கப்பல் போக்குவரத்து நிறுவனங்களிலும் இப்படிப்பை முடிப்பவர் சிறப்பான வாய்ப்புகளையும் சம்பளத்தையும் பெறுகின்றனர்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post