தென்மேற்கு பருவமழை இயல்பாக இருக்கும்
ஜூன் முதல் வாரம் தொடங்கும்
இந்திய வானிலை ஆய்வு மையம் கணிப்பு
நடப்பு ஆண்டு தென்மேற்குப் பருவமழை ஜூன் முதல் வாரம் தொடங்கும். மழை அளவு
இயல்பாகவே இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட முன்னறிவிப்பு
விவரம்:
ஜூன் முதல் செப்டம்பர் வரை பெய்யக் கூடிய தென்மேற்கு பருவமழை காலத்தில்
சராசரியாக 880 மிமீ வரை மழைப் பொழிவு இருக்கும்.
அதன்படி தற்போதைய தரவுகளின் அடிப்படையிலான கணிப்பில் நடப்பு ஆண்டு
தென்மேற்கு பருவமழை 71 சதவீதம் இயல்பு அல்லது இயல்பை விட அதிகமாக
பெய்யவும், 29 சதவீதம் குறையவும் வாய்ப்புள்ளது. எனினும், நாடு முழுவதும்
பருவமழை அளவு இயல்பாகவே அமையும். மேலும், வழக்கம்போல பருவமழை
தொடங்குவதற்கான சாத்தியக் கூறுகள் மே 15-ம் தேதி அந்தமான் பகுதிகளில்
தென்படும்.
ஜூன் முதல் வாரத்தில் கேரளாவில் பருவமழை தொடங்குகிறது. அதன்பின்பு தமிழகம்
வந்தடையும் பருவக்காற்று தென்னிந்திய பகுதிகளில் தீவிரமடைந்து, சிறிய
தொய்வுக்கு பின் வட மாநில பகுதிகளுக்குச் சென் றடையும். காலநிலை
மாற்றத்தால் சில மாநிலங்களில் பருவமழை ஒருவாரம் முன்னதாகவும், சில
பகுதிகளில் சற்று தாமதமாகவும் தொடங்க வாய்ப்புள்ளது.
மேலும், அக்டோபர் மாதத்தில் சரா சரியைவிட மழை அளவு குறையக்கூடும்.
மேலும், தென்மேற்கு பருவமழைக்கு முக்கிய காரணிகளாக விளங்கும் பசிபிக்
மற்றும் இந்திய பெருங்கடல் வெப்பநிலையும் சமநிலையில் உள்ளன. இதனால்
பருவமழையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய எல்நினோ வெப்ப நீரோட்டம் உருவாகும்
வாய்ப்புகள் குறை வாகும்.
அதேநேரம் மிக வலுவிழந்த லாநினோ குளிர்ந்த நீரோட்டம் ஏற்படக் கூடும்.
இதன்காரணமாக மழைப் பொழிவு அதிகரிக்கவே வாய்ப்பு உள்ளது. அடுத்தகட்ட வானிலை
முன்னறிவிப்பு மே இறுதியில் வெளியிடப்படும்.
Post a Comment