தங்கம் விலை வரலாறு காணாத உயர்வு

Join Our KalviNews Telegram Group - Click Here
தங்கம் விலை வரலாறு காணாத உயர்வு

தங்கம் விலை முதல்முறையாக 1 பவுன் ரூ.36,000-ஐ தாண்டியது உலக நாடுகளில் கரோனா வைரஸ் வேகமாக பரவி வரு வதால், பொருளாதார வளர்ச்சி குறையத் தொடங்கியுள்ளது. மேலும், முதலீட்டாளர் களும், பொதுமக்களும் தங்கத் தில் முதலீட்டை தொடங்கிவிட்ட னர்.

ஊரடங்கால் கடைகள் மூடப் பட்டு விற்பனை முடங்கியுள்ள நிலையில், பங்குச்சந்தையில் தங்கம் சார்ந்த முதலீடுகள் அதிகரித்து வருகின்றன. இதனால், தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அதன்படி, முதல்முறையாக 22 கேரட் தங்கம் ஒரு பவுன் ரூ.36 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

 சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்க பொதுச்செயலாளர் எஸ்.சாந்தகுமார் கூறும்போது, ‘‘இப்போதுள்ள சூழ்நிலையை பார்த்தால் இந்த ஆண்டில் தங்கம் விலை 30 சதவீதம் வரை உயர வாய்ப்புள்ளது. இந்த ஆண்டின் இறுதிக்குள் 22 கேரட் தங்கம் ஒரு பவுன் ரூ.40 ஆயிரத்தை நெங்கும் என எதிர்பார்க்கிறோம்’’ என்றார்.
இந்த பயனுள்ள தகவலை அனைத்து வாட்ஸ்அப் குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்..

கருத்துரையிடுக

0 கருத்துகள்