ஊரடங்கு உத்தரவை குழந்தைகளையும் சேர்த்து கடை பிடிக்க வைப்பது எப்படி என்பது குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காண்போம்.
நாளை ஒருநாள் பொதுமக்கள் யாரும் வெளியில் செல்லாமல் சுய ஊரடங்கை
கடைபிடிக்குமாறு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார். அவரது
அறைகூவலை ஏற்று பலர் தாமாக முன்வந்து சுய ஒழுங்கைக் அறிவிப்பதாக
தெரிவித்தனர்.
இந்நிலையில் விடுமுறை காலம் என்றாலே குழந்தைகளுக்கு குதுகலம் தான்.
அவர்களுக்கு கொரோனோ என்றாலும் என்னவென்று தெரியாது. ஊரடங்கு என்றாலும்
என்னவென்று தெரியாது. அவர்கள் மனதில் இருப்பது விளையாட்டு சிந்தனை மட்டுமே
அவர்களை ஒரு நாள் முழுவதும் வீட்டிற்குள் கட்டிப் போடுவது என்பது ஆகாத
காரியம்.
ஆகையால் குழந்தைகளையும் இதனை கடைப்பிடிக்கச் செய்ய குடும்பத்தினர் கீழ்க்கண்ட வழிகளை பின்பற்றலாம்.
கணவன் மனைவி குழந்தைகள் என மூவரும் சேர்ந்து சமையல் செய்யலாம். அல்லது
ஏதாவது புதிய விஷயத்தை குழந்தைக்கு கற்றுக் கொடுத்து அதை குழந்தையை செய்ய
வைக்கலாம். அதுவும் இல்லை என்றால் என்ன கொரோனோ என்றால் என்ன? ஆரோக்கியமான
விவாதத்தை தொடங்கி பேசி கழிப்பதன் மூலம் அவர்களை கட்டுக்குள் வைக்க
முடியும்.
Post a Comment