
இந்த பாட்டாரி பிரச்சனையை தீர்க்க என பற்பல ஆப்ஸ்கள் கூகிள் பிளேயில் தினம் தினம் வந்துக்கொண்டே இருக்கிறது. ஆனால் அதில் பிரபலமான ஆப்பிளிகேசன் எது என்று பார்த்தால் பாட்டரி டாக்டர் Battery Doctor (Battery Saver).
Battery Doctor (Battery Saver)
KS Mobile நிறுவனத்தின் பிரபலமான ஆப்ஸ் இது. இந்த ஆப்பிளிகேசனை உங்கள் மொபைலில் நிறுவினால் நல்ல பாட்டரி சேமிப்பு கிடைக்கிறது. இந்த ஆப்ஸ் பாட்டரியை மூன்று அடுக்கு முறையில் சார்ஜ் செய்கிறது. மேலும் இதன் சிறப்புயல்புகள் என்று பார்த்தால் இந்த அப்ளிகேஷன் மின்சாரத்தை மேலாண்மை செய்கிறது, அதாவது பாட்டரி முழுவதுமாக சேமித்த பின் மொபைலில் உள்ள ஆப்ஸ்கள் தேவைக்கு ஏற்ப மின்சாரம் தருகிறது, அதனால் நமக்கு இரண்டு மடங்கு பாட்டரி நீட்டிப்பு கிடைக்கிறது. மொபைலில் நாம் பல ஆப்ஸ்களை பயன்படுத்துவோம், அவைகளில் மேம்படுத்துதல் (optimization) முறையில் மின்சாரத்தை மிச்சப்படுத்துகிறது.இந்த பாட்டரி டாக்டர் ஆப்பிளிகேசனை ஆண்ட்ராய்ட் 2.3 ஜிங்கர் பிரெட் முதல் ஆண்ட்ராய்ட் 4.4.3 கிட்காட் வரை அனைவரும் பயன்படுத்தலாம்.
டிஸ்கி: KS Mobile நிறுவனத்தின் மற்றொரு பிரபலமான ஆப்ஸ் கிளீன் மாஸ்டர் (Clean Master). இது ஆண்ட்ராய்ட் மொபைலை வேகமாக இயங்க வழிவகை செய்யக்கூடிய ஆப்ஸ். இந்த ஆப்ஸ் பற்றி மற்றொரு பதிவில் விரிவாக பார்க்கலாம்.
அல்லது Google Play Storeல் தரவிறக்க
பாட்டரி சேமிக்க மேலும் சில ஆப்ஸ்:
2. DU Battery Saver & Widgets
இது Battery Doctor அளவுக்கு பிரபலமாகவில்லை என்றாலும் குறைத்து மதிப்பிட முடியாது. இதை உலகில் மில்லியன் கணக்கில் பயன்படுத்துக்கிறார்கள். இதுவும் ஆண்ட்ராய்ட் 2.3 ஜிங்கர் பிரெட் முதல் ஆண்ட்ராய்ட் 4.4.3 கிட்காட் வரை அனைவரும் பயன்படுத்தலாம்.
தரவிறக்க: Play.google.com
3. Easy Battery Saver
இதுவும் Battery Doctor அளவுக்கு பிரபலமாகவில்லை என்றாலும் உலகெங்கும் 8 லக்சம் பேருக்கு மேல் பயன்படுத்துக்கிறார்கள். இது ஆப்ஸ் கொள்ளளவும் ரொம்ப கம்மி. தரவரிசையில் 4.6 புள்ளிகள் பெற்றுள்ளது. இதுவும் ஆண்ட்ராய்ட் 2.3 ஜிங்கர் பிரெட் முதல் ஆண்ட்ராய்ட் 4.4.3 கிட்காட் வரை அனைவரும் பயன்படுத்தலாம்.
தரவிறக்க: Play.google.com
Post a Comment