Title of the document





நாம் ஒவ்வொருவருக்கும் ஆறாவது விரலாக இருப்பது இப்போது ஸ்மார்ட்போன்தான். அதற்கு முன்பு மொபைலை தொலைவில் உள்ளவர்களுடன் பேச மட்டுமே பயன்படுத்தி வந்தோம். இப்போது நமது வாழ்க்கையில் ஸ்மார்ட்போன் இன்றியமையாத ஒரு அங்கமாகவே மாறி விட்டது. ஒரு நல்ல ஸ்மார்ட்போனை தேர்ந்தெடுக்க பல விஷயங்களை பார்ப்போம். நண்பர்களிடம் கருத்து கேட்டு,  ஏற்கனவே வாங்கியவர்களிடம் ரிவ்யு பார்த்து, பணம் சேர்த்து ஆசை ஆசையாய் வாங்கிய மொபைலை ஒரே மாதத்தில் தொலைத்தவர்கள் நிறைய பேர்.






புது ஸ்மார்ட்போனை வாங்கியவுடன் *#06# டயல் செய்து அதில் வரும் IMEI எண்ணை ஒரு டைரியில் குறித்து வைத்துக்கொள்பவர்கள் ரொம்ப கம்மி. காணாமல் போன பிறகுதான் IMEI நம்பர் குறித்து வைக்காதது எவ்வளவு பெரிய தவறு என தெரிய வரும். சரி இன்றைய பதிவில் தொலைந்த/தவறவிட்ட மொபைலின் IMEI நம்பரை கண்டுபிடிப்பது எப்படி?  என்பதை பார்ப்போம். இதை யாரும் பார்த்து தெரிந்துக்கொள்ள முடியும்...

1. கூகிள் குரோம் பிரவுசர் திறந்து https://www.google.com/settings/dashboard என்ற கூகிள் டாஸ்போர்ட் பக்கம் செல்லுங்கள். நீங்கள் ஏற்கனவே தொலைந்த/தவற விட்ட மொபைலில் உங்கள் ஜிமெயில் ஐடியை லாகின் செய்து வைத்து இருப்பீர்கள். அந்த ஐடி மற்றும் பாஸ்வோர்ட் கொடுத்து உள்ளே நுழையுங்கள்.







2. உங்களுக்கு இப்ப கூகிள் டாஸ்போர்ட் பக்கம் தெரியும். அதில் Android என்று மேலே படத்தில் உள்ளது போல வரும், Android என்பதின் மேல் கிளிக் அல்லது டச் செய்தால் உங்கள் மொபைல்களின் விவரங்கள் விரியும்.

3. இப்போது உங்கள் மொபைகள் விவரங்களுடன் IMEI விவரங்களும் தெளிவாக தெரியும். அதனை குறிப்பு எடுத்துக்கொள்ளுங்கள். அவ்வளவுதான்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post