Title of the document
ஆசிரியர் - மாணவர் உறவுமுறையை வலுப்படுத்த வேண்டுவது கல்விச் சூழலில் மிகவும் தேவையானதாகும். ஆசிரியரும் மாணாக்கரும் யாதொரு தடையுமின்றிக் கற்றவற்றைப் பற்றி தமக்குள் மனம் விட்டு விவாதிக்க வேண்டும். 


மாணாக்கர்களைச் சுதந்திரமாகக் கேள்விகள் கேட்கத் தூண்ட வேண்டும். ஆசிரியர் அவற்றுக்கெல்லாம் தக்க விடையளித்து மாணவர்களின் ஐயங்களைப் போக்க வேண்டும். 
கற்பிக்கையில் மக்கள் வாழ்க்கையிலிருந்தே பல செய்திகளையும் எடுத்துக் காட்டுகளையும் கூறி விளக்கம் அளிக்க வேண்டும். மாணாக்கரது அறிவு வேட்கையைத் தூண்டி வடிகாலாக்கி ஆராய்ச்சி மனப்பான்மையை வளர்க்க வேண்டும்.

ஆசிரியர் தன் மாணாக்கரின் குடும்பச் சூழ்நிலையைப் பற்றி அறிந்திருக்க வேண்டும். மாணாக்கரின் பெற்றோர்களுடன் மாணாக்கரது முயற்சி, வளர்ச்சி பற்றிக் கலந்தாலோசித்து மனிதநேயம் வளர்ப்பவராகத் திகழவேண்டும்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post