Title of the document
அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு உத்வேகம் அளிக்கும் விதமாக, தினமும் ஆன்லைன் தேர்வு நடத்தி, அதற்கான சான்றிதழ்களையும் உடனுக்குடன் வழங்கி அசத்துகிறார்.தனியார் பள்ளிகள் அனைத்தும் ஊரடங்கு அறிவித்தது முதலே, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு ஆன்லைன் பயிற்சிகளை துவங்கிவிட்டன.

இதன்மூலம், மாணவர்களுடன், 'வீடியோகால்' வடிவில் ஆசிரியர்கள், நேரடியாக உரையாடி வருகின்றனர். அரசு பள்ளிமாணவர்களுக்கும் இதை சாத்தியப்படுத்த முடியும் என்பதை நிரூபித்துள்ளார் பெருந்தொழுவு அரசு மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் ஹரிஹரன்.

அவர் கூறியதாவது:

தற்போது, ஒரு மாதம் இடைவெளி விட்டதால் படித்ததை எல்லாம் மாணவர்களுக்கு திரும்ப நினைவு படுத்த வேண்டும். அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி சேனல், இ-புத்தகம், கல்வி இணைய தளம் மூலம் பாடங்களை படிக்க அரசு வசதி செய்தது.ஆனாலும், தனியார் பள்ளி மாணவர்களுக்கு 'வீடியோ கால்' வடிவில் கிடைக்கும் ஆசிரியரின் நேரடி கவனிப்பு கிடைக்கவில்லை.எனவே, நானே களத்தில் இறங்கினேன்.

ஜூம் வீடியோகாலில் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கத்துவங்கினேன். மேலும் ஆர்வத்தை துாண்ட, வினாத்தாள்களை, 'குவிஸ்' வடிவில் தயாரித்து அதன் லிங்கை வாட்ஸ்அப் குழுக்களில் பதிவிடுவேன். இதில், மாணவர்கள் உள்ளே நுழைந்ததும், கேள்விகள் வரும். பதிலளித்து முடித்ததும் அதற்கான மதிப்பெண் விவரம், பாராட்டு சான்றிதழ் வடிவில் உடனுக்குடன் திரையில் தோன்றும்படி வடிவமைத்தேன். இதற்கு மாணவர்களிடம் வரவேற்பு கிடைத்துள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post