சென்னை: ஒன்று முதல்
ஒன்பதாம் வகுப்பு
வரையிலான
மாணவர்களுக்கு, ஆல்
பாஸ் வழங்குவது
குறித்து, பள்ளி
ஆவணங்களில் பதிவு
செய்ய வேண்டும் என,
தலைமை
ஆசிரியர்களுக்கு
உத்தரவிடப்பட்டுள்ளது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு
நடவடிக்கையாக, பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது. மார்ச், 26ல்
நடக்கவிருந்த, பிளஸ் 1 தேர்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஒன்று முதல்
ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, ஏப்ரலில் நடக்கவிருந்த மூன்றாம்
பருவ தேர்வும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில்,
ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, தேர்வு இன்றி,
அனைவருக்கும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படும் என, தமிழக அரசு
அறிவித்துள்ளது.
இதைத்தொடர்ந்து, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும், பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன் அனுப்பி உள்ள சுற்றறிக்கை:
அனைத்து
வகை பள்ளிகளிலும், ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படித்த மாணவர்கள்
அனைவரும், தேர்வு இல்லாமல் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே,
அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும், இதுகுறித்து, மொபைல் போன் மற்றும்,
&'இ - மெயில்&' வழியாக, உரிய வழிகாட்டல் வழங்க வேண்டும்.பள்ளிகள்
திறந்தபின், மாணவர்களின் பெயர்களை தேர்ச்சி பதிவேட்டில் பதிவு செய்து, உரிய
பதிவுகளை மேற்கொண்டு, மாணவர்களின் தேர்ச்சியை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
Post a Comment