வளாக நேர்காணலுக்கு ஆன்லைன் பயிற்சி

Join Our KalviNews Telegram Group - Click Here
கோவை: வளாக நேர்காணலுக்கான திறன் பயிற்சி வகுப்புக்களை, கல்லுாரிகள் ஆன்லைன் மூலம் இறுதியாண்டு மாணவர்களுக்கு நடத்தி வருகின்றன.

ஊரடங்கு அமலில் உள்ளதால், அனைத்து கல்லுாரிகளுக்கும் விடுமுறைஅளிக்கப்பட்டு, &'ஆன்லைன்&' மூலம் மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன.அடுத்த கல்வியாண்டு துவக்கத்தில் செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், வளாக நேர்காணல், வேலைவாய்ப்பு குறித்து எதுவும் தெரியாமல் மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

இதையடுத்து, சில கல்வி நிறுவனங்கள், இறுதியாண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வளாக நேர்காணல் திறன் பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகின்றன. இதற்காக சில, &'ஸ்டார்ட் அப்&' நிறுவனங்கள் மூலம் தங்கள் மாண வர்களின் திறனை மேம்படுத்தி கொண்டு வேலை வாய்ப்புக்கான தகுதிபெறும் பயிற்சி வகுப்புகளை ஆன்லைன் மூலம் நடத்துகின்றன.

கல்லுாரி நிர்வாகிகள் கூறுகையில், &'நிறுவன இணையதளம் மூலம் மாணவர்கள் இந்த பயிற்சி வகுப்புகளில் கட்டணம் இல்லாமல் படிக்கின்றனர். முன்னணி நிறுவனங்களை சேர்ந்த, 100 தொழில்நுட்ப வல்லுனர்கள் நிறுவனங்கள் எதிர்பார்க்கும் தொழில்நுட்பம் தொடர்பான ஒரு மாத இணைய வகுப்புகளையும்நடத்துகின்றனர்&' என்றனர்.
இந்த பயனுள்ள தகவலை அனைத்து வாட்ஸ்அப் குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்..

கருத்துரையிடுக

0 கருத்துகள்