வாசிப்பது என்பது உள்ளங்கை கண்ணாடி போன்றது. உலகையே கையில் கொண்டு
வருபவை நாளிதழ்கள். நாளிதழ்கள் படிக்கும் பழக்கம் அனைவருக்கும் கிடைக்காது.
கடந்த காலங்களில் ஓலைச்சுவடிகள் மூலம் செய்திகள் பறிமாறப்பட்டன. அனைத்து
துறையினருக்கும் தேவையான செய்திகள், நாளிதழ்களில் உள்ளன. அதை பகுத்தாய்ந்து
படிக்க வேண்டும். வாட்ஸ்ஆப், பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக
வலைதளங்களில் செய்திகள் கிடைத்தாலும் அவற்றில் கருத்தாழம் இருக்காது.
உலகத்தை
தெரிந்து கொள்ள நாளிதழ்களே மிகவும் பயனுள்ள ஒன்று. இளைய தலைமுறையினருக்கு
இந்த காலம் பொருத்தமான ஒன்று. இது பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்று. அதை
அனைவரும் பின்பற்ற வேண்டும். அதற்கு இது சரியான தருணம்.
மொழி ஆளுமை தரும் செய்தித்தாள்!
சுமித் சரண், கோவை மாநகர போலீஸ் கமிஷனர்:
நாளிதழ்
வாசிப்பது மிகவும் அவசியமானது, முக்கியமானது. நம்மை சுற்றி நடக்கும்
அனைத்து விபரங்களையும் நாளிதழ் வாசிப்பதன் மூலம் மட்டுமே அறிந்து கொள்ள
முடியும். தொடர் வாசிப்பின் மூலம் மட்டுமே பொது அறிவை வளர்த்துக் கொள்ள
முடியும். நாட்டு நடப்புகள் மட்டுமின்றி உலகளவில் நடக்கும் அனைத்து
விஷயங்களையும் செய்தித்தாள் வாசிப்பதன் மூலம் மட்டுமே அறிந்து கொள்ள
முடியும்.
பள்ளிப்பருவம் முதல் நான்
செய்தித்தாள் வாசித்து வருகிறேன். என் தந்தை செய்தித்தாள் வாசிப்பதை
தொடர்ந்து வலியுறுத்தியுள்ளார். மொழி அறிவு அதிகரிக்க செய்தித்தாள்
வாசிப்பது என்பது மிகவும் முக்கியமான ஒன்று. ஒவ்வொருவரும் கட்டாயம்
செய்தித்தாள் வாசிக்க வேண்டும். செய்தித்தாள் வாசிப்பதுடன் தலையங்கம்
வாசிப்பது, மிகவும் முக்கியமான ஒன்று. மொழியாளுமை வளர செய்தித்தாள்
வாசிப்பது அவசியம்.
உலக அறிவு பெறுவது அவசியம்!
சுஜித்குமார், எஸ்.பி., கோவை மாவட்ட போலீஸ்:
வாசிப்பது
என்பது மிகவும் முக்கியமான ஒன்று. மக்கள் உலகளாவிய அறிவை பெற நாளிதழ்
வாசிப்பது அவசியம். ஒவ்வொருவரும் தங்களுக்கு தெரிந்த அறிமுகமான நாளிதழை
படிப்பது அவசியமான ஒன்று. தங்களை தொடர்ந்து மேம்படுத்திக் கொள்ள நாளிதழ்
உதவுகிறது. நம் நாடு குறித்து அறிந்தால் மட்டும் போதாது. உலகம் முழுவதும்
என்ன நடக்கிறது என்பது குறித்து தெரிந்திருக்க வேண்டும்.
சமூக
வலைதளங்கள் மூலம் இன்று பொய்யான தகவல்களே பரப்பப்படுகின்றன. அவற்றை
பகுத்தறிய நாளிதழ் வாசிப்பு அவசியம். ஒவ்வொருவரும் நாளிதழ் வாசிக்க
வேண்டும். தினமும், பல நாளிதழ்களை வாசிக்கிறேன். பல காலமாக நாளிதழ் படித்து
வருகிறேன். வாசிக்கும் பழக்கம் இல்லாதவர்கள் கூட இந்த சமயத்தை பயன்படுத்தி
வாசிக்க பழகலாம்.
நாளிதழ் வாசிப்பு அவசியம்
முத்தரசு, துணை கமிஷனர், கோவை மாநகர போக்குவரத்து போலீஸ்:
அனைத்து
செய்திகளையும் விரைவில் தெரிந்து கொள்ள நாளிதழ் உதவுகிறது.
&'டிவி&'களில் ஓரிரு வரிகளில் சொல்லப்படும் செய்திகள் நாளிதழ்களில்
விரிவாக எடுத்துரைக்கப்படுகிறது. இதன் மூலம் பகுத்தறியும் திறன்
அதிகரிக்கும். மண்டல அளவிலான செய்திகள் நாளிதழில் இடம் பெறுவதால் நமக்கு
அருகில் என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ள முடியும். அதனால், நாளிதழ்
வாசிப்பது அவசியம். தற்சமயம் அதிக நேரம் இருப்பதால் அதை பயன்படுத்திக்
கொள்ள வேண்டும்.
மனதில் நிற்கும் நாளிதழ்
கிருஷ்ணராஜ், எஸ்.பி., கோவை மத்திய சிறை:
நாளிதழ்
படித்தால் மட்டுமே உலகளாவிய நடப்புகள் தெரியவரும். &'டிவி&'யில்
செய்திகளை பார்த்தாலும், கேட்டாலும் அது நிற்காது. ஆனால், நாளிதழ்களை
வாசிக்கும் போது அவை மனதில் நிற்கும். இதன் மூலம் அறிவு வளரும். மேலும்,
வாசிக்கும் பழக்கம் மிகவும் அவசியமான ஒன்று. மேலும், &'கொரோனா&'
நாளிதழ்கள் மூலம் பரவாது. இதுவரை அதற்கான எந்த ஒரு நிரூபணமும் இல்லை.
தினமும் நாளிதழ் வாசிக்க தவறுவதில்லை.
நாளிதழ் காலத்தின் கண்ணாடி!
உமா, துணை கமிஷனர், கோவை மாநகர குற்றப்பிரிவு:
சமூக
இயக்கத்தை பதிவு செய்யும் தொகுப்பாக நாளிதழ் உள்ளது. அதனால், அதை கட்டாயம்
படிக்க வேண்டும். குறிப்பாக மாற்றங்களை புரிந்து கொள்ளவும், அன்றாட
நிகழ்வுகளை தெரிந்து கொள்வதற்காகவும், நாளிதழ் படிப்பது அவசியம். பல்வேறு
நிகழ்வுகளை ஓரிடத்துக்கு கொண்டு வருகின்றன. நாளிதழில் வரும் செய்திகள்
மிகப்பெரிய பதிவு. நாளிதழ்கள் காலத்தின் கண்ணாடி. முந்தைய நிகழ்வுகளையும்
தெரிந்து கொள்ள நாளிதழ்கள் உதவுகின்றன. அதனால், அதை தினமும் படிப்பது
அவசியம் என, நினைக்கிறேன்.
Post a Comment