Title of the document
அரசு ஊழியர்களின் ஒரு மாத சம்பள பிடித்தம் கேரள அரசின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை 
 கரோனா வைரஸ் பாதிப்பால் ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்பை ஈடுசெய்ய அரசு ஊழியர்களின் ஒரு மாத சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்று கேரள அரசு அறிவித்தது. அடுத்த 5 மாதங்களுக்கு தவணை முறையில் பிடித்தம் செய்யப்படும் என்று உத்தரவு பிறப்பித்தது. அனைத்து அரசு துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றுக்கு இது பொருந்தும் என்றும் உத்தரவில் கூறப்பட்டது. 
 கேரள அரசின் இந்த உத்தரவை எதிர்த்து பல்வேறு அரசு ஊழியர் சங்கங்கள் சார்பில் கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு ஊழியர்களின் 30 நாள் சம்பளத்தை பிடித்தம் செய்யும் கேரள அரசின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிப்பதாக நீதிபதி பெச்சு குரியன் தாமஸ் தலைமையிலான அமர்வு உத்தரவிட்டது. 
இந்த இடைக்காலத் தடை உத்தரவு இரண்டு மாதங்களுக்குத் தொடரும் என்று அறிவித்த நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர். கேரள உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவு முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி அரசுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. துளிர்கல்வி வாசக நண்பர்களுக்கு வணக்கம், இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் தயவுசெய்து SHARE செய்ய மறக்க வேண்டாம்! நட்பில் இணைந்திருங்கள்! நன்றி!!!
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post