உலகளவில் கரோனா உயிரிழப்பு 65 ஆயிரத்தை தாண்டியது

Join Our KalviNews Telegram Group - Click Here
உலகளவில் கரோனா நோய்த்தொற்றுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 65,449 ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்ட்டோரின் எண்ணிக்கை 12 லட்சத்து 14 ஆயிரத்து 913 ஆக உயர்ந்துள்ளது.
சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஹூபேய் மாகாணம் வூஹானில் பரவத்தொடங்கிய கரோனாவின் கோரத்தாண்டவத்துக்கு உலகம் முழுவதும் 216க்கும் மேற்பட்ட நாடுகளில் 65 ஆயிரத்து 449 பேரை பலி வாங்கியுள்ளது. இதுவரை 12 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர், இதுவரை 2 லட்சத்து 53 ஆயிரத்து 670 பேர் நோய்த்தொற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்.
அதிகபட்சமாக இத்தாலியில்15 பேர் 362 பேரும், ஸ்பெயினில் 12 ஆயிரத்து 418 பேரும், அமெரிக்காவில் 8 ஆயிரத்து 454 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த பயனுள்ள தகவலை அனைத்து வாட்ஸ்அப் குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்..

கருத்துரையிடுக

0 கருத்துகள்