Title of the document
புதுடில்லி: கொரோனா வைரஸ் தொற்று இருந்தும், அறிகுறி ஏதுமில்லாமல், அதே சமயம் நோயை பரப்பிக்கொண்டு பலர் இருக்கக்கூடும் என்பதால், விரைவான ஆன்டிபாடி பரிசோதனைகளை நடைமுறைப்படுத்தலாம் என வல்லுநர் குழு கூறியுள்ளது.இந்தியாவில் இன்றைய (ஏப்.,5) நிலவரப்படி 3,374 பேர் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 79 பேர் உயிரிழந்துள்ளனர். பல நூறு பேருக்கு சோதனை செய்யப்பட்டு, முடிவுகள் வர வேண்டியுள்ளது. மத்திய சுகாதார அமைச்சகம் சனிக்கிழமையன்று, கொரோனா ஆபத்து அதிகமுள்ள பகுதிகள், பெரியளவில் இடம்பெயர்ந்து வந்தவர்களிடம் மட்டும் விரைவான ஆன்டிபாடி பரிசோதனை செய்ய பரிந்துரைத்துள்ளது. மேலும் இச்சோதனை செய்ய தனியார் துறைக்கு இதுவரை அனுமதியளிக்கப்படவில்லை.இந்தியாவின் மிக முக்கியமான மருத்துவ மற்றும் பொது சுகாதார நிபுணர்களை உள்ளடக்கிய குழு, அரசுக்கு அளித்துள்ள பரிந்துரையில், ஆபத்திலுள்ள அனைவருக்கும், விரைவான ஆன்டிபாடி பரிசோதனைகள் செய்ய வேண்டும். தனியார் துறையை ஈடுபடுத்தி, தொற்று பரவிய பகுதிகளுக்கு வெளியேயும் பரிசோதனையை அதிகரிக்க வேண்டுமென கூறியுள்ளது. இதனை அரசு ஏற்றுக்கொண்டால், அறிகுறி உள்ளவர், அறிகுறி இல்லாதவர் என பலருக்கும் விரைவாக சோதனை நடத்தலாம். வளர்ந்து வரும் சூழ்நிலைக்கு ஏற்ப, ஒவ்வொரு 2 அல்லது 3 நாட்களுக்கு ஒரு முறை நெறிமுறைகளை மாற்றி வருவதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கூறியுள்ளது.இரண்டு வீரர்கள் நம் உடலில் நோய் தொற்று ஏற்பட்டால், நோய் எதிர்ப்பு மண்டலமானது, ஆன்டிபாடிகள் எனப்படும் இரண்டு நோய் எதிர்ப்பு பொருளை உற்பத்தி செய்யும். அவை இம்யூனோகுளோபுலின் எம் (IGm) மற்றும் இம்யூனோகுளோபுலின் ஜி (IGg).

நோய் தொற்று ஏற்பட்ட பிந்தைய 7 நாட்களில், அவற்றை சமாளிக்க முதலில் இம்யூனோகுளோபுலின்-எம் களமிறக்கப்படும். மூன்று முதல் நான்கு வாரங்களில் இதன் அளவு உயர்ந்து குறையும். பத்தாவது நாளில் இம்யூனோகுளோபுலின்-ஜி தோன்றி தொற்று நோயை எதிர்த்து போராடும்.கொரோனாவை ஆன்டிபாடிகள் எவ்வாறு உறுதிப்படுத்தும்? எளிதான ரத்த பரிசோதனைகளில் மேற்கூறிய ஐஜிஎம் மற்றும் ஐஜிஜி ஆகிய இரண்டு ஆன்டிபாடிகள் காணப்பட்டால், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்படும்.

ஆன்டிபாடிகள் தன்மை ஆளுக்கு ஆள் வேறுபடும் என்பதால், தொற்று ஏற்பட்டு, 21 நாட்கள் கடந்த நபரை பரிசோதித்தால், முடிவுகள் துல்லியமாக இருக்கும் என நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள். இது, நோய்த்தொற்றைக் கண்டறிய, தொண்டை திரவத்தை எடுத்து பரிசோதிக்கும் ஆர்டி-பிசிஆர் சோதனை போல் கடினமானதில்லை. நேரமும் அதிகம் பிடிக்காது. 20 நிமிடங்களில் முடிவு தெரிந்துவிடும்.

தொற்று ஏற்பட்டு, இதுவரை கண்டறியப்படாமல் இருப்பவர்களை, இதன் மூலம் கண்டறியலாம்.அதிக பரிசோதனைகள் மூலம், எங்கெல்லாம் வைரஸ் பரவல் உள்ளது என்ற வரைபடத்தை இப்பரிசோதனை அளிக்கும். இருப்பினும், தொற்று ஏற்பட்டு மூன்று வாரம் கடந்த நபர்களுக்கு மட்டுமே இப்பரிசோதனை சரியான முடிவுகளை அளிக்கும். சீனாவும், சிங்கப்பூரும் தொற்றுநோயை கண்காணிக்க இச்சோதனையை பயன்படுத்துகின்றன. இத்தாலி, பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள், யாரெல்லாம் நோய் எதிர்ப்பு சக்தி பெற்றார்கள், யாரையெல்லாம் தனிமைப்படுத்த வேண்டும் என்பதற்காக பயன்படுத்துகின்றன.

அமெரிக்கா வெள்ளியன்று, தங்கள் நாட்டில் ஆன்டிபாடி பரிசோதனை செய்ய அனுமதியளித்துள்ளது. புனேவில் உள்ள தேசிய வைரலாஜி நிறுவனம், ஐரோப்பா மற்றும் பிற நாடுகளிலிருந்து 11 ஆன்டிபாடி பரிசோதனை கருவிகளை தயார் நிலையில் வைத்துள்ளது. அவற்றில் இந்தியாவைச் சேர்ந்த ஒன்றும் உள்ளது.ஆனாலும் ஆர்டி - பிசிஆர் தான் துல்லியமான மற்றும் அறிகுறியின் ஆரம்ப காலத்திலேயே கொரோனாவை கண்டறியும் பரிசோதனை. இதில் முடிவுகள் தெரிய நீண்ட நேரம் ஆவது, அதிக மக்கள் தொகை கொண்ட நம் நாட்டுக்கு பின்னடைவாக உள்ளது. மற்றொரு கேரளாவை சேர்ந்த அவுட் ஆப் தி பாக்ஸ் (OFB) ஊரடங்கு காரணமாக விடுமுறையில் உள்ள பள்ளி மாணவர்களுக்கென ஒரு வார ஆன்லைன் இலவச பயிற்சி வகுப்பினை துவங்கியுள்ளது. அறிவியல்பூர்வமான யோசனை செய்வது மற்றும் எண்ணங்களை வடிவமைப்பது எப்படி என மாணவர்களுக்கு போதிக்கப்படுகிறது. இந்த வாரம் துவங்கப்பட்டுள்ள இமேஜினேஷன் டூ இமேஜ் என்ற பாடம் மாணவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post