புதுடில்லி: தனது வீட்டிலேயே 3-டி பிரிண்டிங்கில்
முகக்கவசம் தயாரித்து, அதனை சுகாதார பணியாளர்களுக்கு வழங்கி 20 வயது டில்லி
இளைஞர் அசத்தி உள்ளார்.
இந்தியாவில்
கொரோனா வேகமாக பரவி வருகிறது. கொரோனா தொற்று உள்ளவர்களுக்கு சிகிச்சை
அளித்து வரும் டாக்டர்கள், நர்ஸ்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு
தேவையான மருத்துவ உபகரணங்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில்
டில்லியை சேர்ந்த உதித் ககர் என்ற 20 வயது இளைஞர், 3டி பிரிண்டிங்கில்
வீட்டிலேயே முகக்கவசங்கள் தயார் செய்து சுகாதார பணியாளர்களுக்கு வழங்கி
வருகிறார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
என்
அம்மா ஒரு டாக்டர். அவருக்கும் அவர் பணிபுரியும் மருத்துவமனைக்கும் முக
கவசங்கள் தேவைப்பட்டன. அதற்காக 3-டி பிரிண்டிங்கில் முகக்கவசங்களை
தயாரித்தேன். முடிந்தவரை இந்த முககவசங்களை பல டாக்டர்களுக்கும்
கிடைக்கப்பெறும் வகையில், தயாரிக்க விரும்புகிறேன். ஒரு கவசம் அச்சிட 1
முதல் 1.30 மணி நேரம் ஆகும். நான் மூன்று 3டி பிரிண்டர்களை வைத்திருப்பதால்
ஒரு நாளில் 20 முதல் 25 முகக்கவசங்களை தயார் செய்ய முடியும். டில்லியில்
உள்ள சில ஆய்வங்கள், டாக்டர்கள் என 6 பேர் என்னிடம் இதற்காக ஒப்பந்தம்
செய்துள்ளனர்&' இவ்வாறு அவர் கூறினார்.
Post a Comment